மிராஜ் 2000
போர் வானூர்தி From Wikipedia, the free encyclopedia
போர் வானூர்தி From Wikipedia, the free encyclopedia
தசால்ட் மிராஜ் 2000 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது பிரான்சு நாட்டின் தசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நான்காம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.
மிராஜ் 2000 Mirage 2000 | |
---|---|
வகை | பன்முகச் சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | பிரான்சு |
உற்பத்தியாளர் | தசால்ட் ஏவியேசன் |
முதல் பயணம் | 10 மார்ச் 1978 |
அறிமுகம் | சூலை1984 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை ஐக்கிய அரபு அமீரக வான்படை கிரேக்க வான்படை இந்திய வான்படை |
உற்பத்தி | 1978–2007 |
தயாரிப்பு எண்ணிக்கை | 601[1] |
இந்த வானூர்தி முச்சக்கர வடிவு கொண்ட இறங்கமைப்பை கொண்டுள்ளது. ஓடுபாதையில் நிறுத்துவதற்காக பின்பகுதியில் கொக்கி அல்லது வான்குடை பொருத்தப்படலாம், இது தரையிறங்கும் தூரத்தை குறைக்க கார்பன் நிறுத்திகளுடன் இணைந்து செயல்படும். இதன் முன் பகுதியில் வான்வழி எரிபொருள் நிரப்புதல் கருவியைக் கொண்டுள்ளது..[2]
மிராஜ் முக்கோண இறக்கைகளைக் கொண்ட ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். தலா நான்கு தானியங்கி பட்டிகைகள் மற்றும் இறக்கைத் துடுப்புகள் இறக்கைகளின் விளிம்புகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு இறக்கைக்கும் மேலேயும் கீழேயும் காற்று நிறுத்திகள் பொருத்தப்பட்டுள்ளது.[2]
பொது இயல்புகள்
செயற்பாடுகள்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.