மல்லூர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மல்லூர் (ஆங்கிலம்:Mallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மல்லூர் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 11°33′N 78°08′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | சேலம் தெற்கு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,331 (2011[update]) • 1,009/km2 (2,613/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
10.24 சதுர கிலோமீட்டர்கள் (3.95 sq mi) • 293 மீட்டர்கள் (961 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/mallur |
மல்லூர் பேரூராட்சிக்கு வடக்கே 18 கிமீ தொலைவில் சேலம், தெற்கில் 30 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. மல்லூரில் பேருந்து நிலையம் உள்ளது.
10.24 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 56 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,754 குடும்பங்களும், 10,331 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.65% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1021 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
இவ்வூரின் அமைவிடம் 11.55°N 78.13°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.