மங்காத்தா (திரைப்படம்)
வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
மங்காத்தா இங்கு வழிமாற்றப்படுகிறது. விளையாட்டு பற்றி அறிய மங்காத்தா (விளையாட்டு) ஐப் பார்க்க.
மங்காத்தா (Mankatha) 2011 ஆகஸ்ட் 31 ல் வெளியான ஒரு தமிழ் அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். இப்படம் அஜீத் குமாரின் 50 ஆவது படம் ஆகும். தயாநிதி அழகிரியின் கிளௌட் நயன் மூவீஸ் கலையகம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. மங்காத்தா படம் தமிழில் வெளிவந்ததை அடுத்து, விரைவில் கேம்ப்ளர் என்ற பெயரில் தெலுங்கில் வர இருக்கிறது. மலையாளத்திலும் இப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். இப்படம் 2007-ல் வெளியான பில்லா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
விரைவான உண்மைகள் மங்காத்தா, இயக்கம் ...
மங்காத்தா | |
---|---|
இயக்கம் | வெங்கட் பிரபு |
தயாரிப்பு |
|
கதை | வெங்கட் பிரபு |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சக்தி சரவணன் |
படத்தொகுப்பு | கே. எல். பிரவீன் என். பி. ஸ்ரீகாந்த் |
கலையகம் | கிளௌட் நயன் மூவீஸ் |
விநியோகம் | கிளௌட் நயன் மூவீஸ் சன் பிக்சர்ஸ் அயங்கரன் (உலகளவில்) ராடான் மீடியாவொர்க்ஸ் (தமிழ்நாடு திரைப்பட வினியோகிஸ்த உரிமை) |
வெளியீடு | ஆகத்து 31, 2011 (2011-08-31) |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹75 கோடி[சான்று தேவை] |
மூடு