மனிதக் குடியேற்றப் பகுதி From Wikipedia, the free encyclopedia
மகோபா (Mahoba) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும்.[3] புந்தேல்கண்ட் பிராந்தியத்தில், கூர்ஜர-பிரதிகார பாணியில் கட்டப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டு சூரியக் கோயிலுக்கு இந்நகரம் நன்கு அறியப்பட்டதாகும். இது கோகர் மலையில் உள்ள 24 பாறைகளால் வெட்டப்பட்ட சைனத் தீர்த்தங்கரர் சிலைக்கும் நன்கு அறியப்பட்ட இடமாகும்.[4] மகோபா கஜுராஹோ, இலவகுசா நகர் மற்றும் குல்பகார், சரகாரி, கலிஞ்சர் கோட்டை, ஓர்ச்சா மற்றும் ஜான்சி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அதன் நெருக்கத்திற்காக அறியப்படுகிறது . இந்த நகரம் இருப்புப்பாதைப் போக்குவரத்து மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மகோபா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25.28°N 79.872885°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மகோபா |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | மனோஜ் குமார் சௌகான் |
ஏற்றம் | 214 m (702 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 95,216 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 210 427 |
தொலைபேசி இணைப்புக் குறியீடு | 91-5281 |
பாலின விகிதம் | 922 ♂/♀ |
கல்வியறிவு | 76.91%[2] |
இணையதளம் | www |
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மகோபாவில் 95,216 மக்கள் இருப்பதாக கூறுகிறது. இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 74.91% ஆகும். இது மாநில சராசரியான 67.68% ஐ விட அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வியறிவு 82.03% எனவும் பெண்களின் கல்வியறிவு 66.88% எனவும் உள்ளது. மக்கள் தொகையில் 12.68% 6 வயதுக்குட்பட்டவர்கள்.
மகோபாவின் மொத்த மக்கள் தொகையில் 14.93% மற்றும் 0.42% பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினத்தவரும்) உள்ளனர். மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகையில் 75.21% இந்துக்கள், 23.64% முஸ்லிம்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் பிற மதத்தினராக அறியப்படுகிறார்கள்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.