பௌரவர் (Pauravas) (சமஸ்கிருதம்:पौरव), யயாதி-தேவயானிக்கும் பிறந்த ஐந்தாவது மகன் புருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். [1] பௌரவர்கள், கி மு 890 முதல் 322 முடிய பண்டைய இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு இந்தியாவை ஆண்டவர்கள். முதலில் பௌரவர்கள் அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு குரு நாட்டை ஆண்டவர்கள். கி மு எட்டாம் நூற்றாண்டில், கடுமையான மழை வெள்ளத்தால் அத்தினாபுரம் அழிந்த பின், கௌசாம்பி (Kausambi) என்ற இடத்தில் புதிய தலைநகரை அமைத்து குரு நாட்டை ஆண்டனர். வட இந்தியாவில் மகாஜனபாத குடியரசு நாடுகள் உருவான பின்னர் பௌரவர்களின் குரு நாடு கி மு 5 மற்றும் 4ஆம் நூற்றாண்டுகளில் வீழ்ச்சி கண்டது.[2]

Thumb
வட இந்தியாவில் சிந்து ஆறு - கங்கை ஆற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் விருஷ்ணி மக்களின் வாழ்விடமான மதுரா: அருகில் சகலா, அருச்சுனயானர்கள், யௌதேயர்கள், பௌரவர்கள், குலிந்தர்கள் மற்றும் ஆதும்பரர்கள்

வரலாறு

பௌரவர்கள் குலம் குறித்த வரலாறு மகாபாரதம் இதிகாசத்தில் ஆதி பருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யயாதி-தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோண்றல்கள் யாதவர்கள் என்றும்; இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோண்றல்கள் யவனர்கள் என்றும்; யயாதி-சர்மித்தைக்கு பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோண்றல்கள் போஜர்கள் என்றும், நான்காவது மகன், அனுவின் வழித்தோண்றல்கள் மிலேச்சர்கள் என்றும், ஐந்தாவது மகன் புருவின் வழித்தோண்றல்கள் பௌரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். [3] [4]புருவின் வழித்தோண்றல்களே பாண்டவர் மற்றும் கௌரவர் ஆவார். வேதகாலத்தில் பௌரவர்கள் மன்னர் சுதாஸின் தலைமையில், பத்து அரசர்கள் போரில், பாரசீகர்களை வென்றனர்.

பௌரவ அரச மரபைச் சேர்ந்த போரஸ், கி மு 326இல் நடந்த போரில் ஜீலம் ஆற்றாங்கரையில் நடந்த போரில், அலெக்சாண்டரிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும் பேரரசின் போர் வீரத்தைப் பாராட்டி, அலெக்சாண்டர் தாம் வென்ற இந்தியப் பகுதிகளுக்கு, தமது பிரதிநிதியாக நியமித்து கௌரவித்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.