நவாப் தோஸ்த் முகமது கான் (சுமார் 1672-1728); 1707 இல் போபால் மாநிலத்தை நிறுவி 1728 வரை ஆட்சி செய்தார். 1716 மற்றும் 1720களின் முற்பகுதியில் இசுலாம்நகர் நகரத்தையும் இவர் நிறுவினார்.
நவாப் சுல்தான் முகம்மது (1720-?); 1728 முதல் 1742 வரை ஆட்சி செய்தார்.
நவாப் யார் முகம்மது கான் (1709-1742), போபாலின் அரசப் பிரதிநிதி; 1728-1742.
நவாப் பைசு முகமது கான் (1731-1777); 1742 முதல் 1777 வரை ஆட்சி செய்தார்.
நவாப் கயாத் முகம்மது கான் (1736-1807); 1777 முதல் 1807 வரை ஆட்சி செய்தார்.
நவாப் கௌசு முகமது கான் (1767-1826); 1807 முதல் 1826 வரை ஆட்சி செய்தார்.
நவாப் முயிசு முகம்மது கான் (சுமார் 1795-1869); 1826 முதல் 1837 வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பின் இவரது மனைவி குத்சியா பேகம் பதவியேற்றார்.
நவாப் ஜஹாங்கீர் முகம்மது கான் (1816-1844); 1837 முதல் 1844 வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பின் இவரது மகள் ஷாஜகான் பேகம் ஆட்சிக்கு வந்தார்.
போபாலின் நவாப் பேகம்
குத்சியா பேகம், (1819 முதல் 1837 வரை ஆட்சி செய்தவர்) - 1819 இல், 18 வயதான குத்சியா பேகம் (கோகர் பேகம் என்றும் அழைக்கப்படுகிறார்) தனது கணவரின் படுகொலைக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றதன் மூலம் போபாலின் முதல் பெண் ஆட்சியாளரானார். தனது 2 வயது மகள் சிக்கந்தர் பேகம் தன்னைத் தொடர்ந்து ஆட்சியாளராக வருவார் என்று அறிவித்தார். ஆண் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இவரது முடிவை எதிர்க்கத் துணியவில்லை. இவர் 1837 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் தனது மகளை மாநிலத்தை ஆள போதுமான அளவு தயார்படுத்திய நிலையில் இறந்தார். இவரது மகள் சிக்கந்தர் பேகத்தை மணந்த இவரது மருமகன் ஜஹாங்கீர் முகம்மது கான் இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தார்.
நவாப் சிக்கந்தர் பேகம் (1860 முதல் 1868 வரை ஆட்சி செய்தவர்)
ஷாஜகான் பேகம் போபாலின் சுதேச அரசை இரு தடவை ஆட்சி செய்தவராவார். முதல் முறை தனது தாயாரின் உதவியாலும் (1844 - 60), இரண்டாவதாக (1868 - 1901) தனியாகவும் போபாலின் பேகமாக இருந்தார்.[2] மாநிலத்தின் பொறுப்பை ஏற்றவுடன், வரி வருவாய் முறையை மேம்படுத்தினார். தனது வீரர்களின் சம்பளத்தை உயர்த்தினார். இராணுவத்தின் ஆயுதங்களை நவீனப்படுத்தினார். ஒரு அணையும் ஒரு செயற்கை ஏரியும் கட்டினார். காவலர் படையின் செயல்திறனை மேம்படுத்தினார். மேலும், இராச்சியம் இரண்டு முறை பிளேக் நோயைச் சந்தித்த பின்னர் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டார் (மக்கள் தொகை 7,44,000 ஆகக் குறைந்தது). தனது வரி வருவாயின் பற்றாக்குறையை சமன் செய்ய, அபினி சாகுபடியை ஊக்குவித்தார். இவரது ஆட்சியின் போது போபால் மாநிலத்தின் முதல் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. 1876 மற்றும் 1878ஆம் ஆண்டுகளில் அரையணா மற்றும் காலணா மதிப்பில் அஞ்சல் முத்திரைகள் வெளியிடப்பட்டட்ன
பேகம் கைகுஸ்ராவ் ஜஹான் (1901 முதல் 1926 வரை ஆட்சி செய்தார், 1930 இல் இறந்தார்)
பெயரிடப்பட்ட ஆட்சியாளர்கள்
அல்-ஹஜ் நவாப் சர் அபீசு முகமது ஹமீதுல்லாஹ் கான் பகதூர் (1894-1960); 1926-1947 வரை ஆட்சி செய்தார். 1960 இல் தான் இறக்கும் வரை பெயரளவு ஆட்சியாளராக பணியாற்றினார். போபாலின் இறையாண்மையுள்ள கடைசி நவாப்.
சாஜிதா சுல்தான் (1915 - 1995); (1960-1971), போபாலின் பேகம் என்ற பெயரை மட்டும் வைத்திருந்த இவர் 1971 வரை இந்திய அரசியலமைப்பின் 26 வது திருத்தத்தின் மூலம் அரச உரிமைகளை இந்தியா ரத்து செய்யும் வரை ஆட்சி செய்தார். [3]