From Wikipedia, the free encyclopedia
பேரீச்சை Phoenix dactylifera பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம். இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இம்மரம் முதன்முதலில் எங்கு வளர்க்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரியவில்லை எனினும் பெர்சியக் குடாவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1] இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை இருக்கும். ஒவ்வோர் ஈர்க்கும் 30 செ. மீ நீளம் வரை வளரும். மரத்தின் உச்சி 6 முதல் 10 மீட்டர் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி சத்தினைக் கொண்டிருக்கும்.இம்மரம் தோற்றத்தில் தமிழகத்தில் இயல்பாக காணப்படும் ஈச்சை மரத்தை ஒத்தது.
பேரீச்சை | |
---|---|
துபையின் ரசீதியாவில் உள்ள ஒரு பேரீச்சை மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Arecales |
குடும்பம்: | Arecaceae |
பேரினம்: | Phoenix |
இனம்: | P. dactylifera |
இருசொற் பெயரீடு | |
Phoenix dactylifera லி. | |
பேரீச்சை விவசாயம் செய்பவர்கள் அதற்கான மகரந்தச் சேர்க்கையை செயற்கை முறையில் செய்கின்றனர். தனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூ வரும்போது மகரந்தத்தைச் சேகரித்து, அதை பெண் மரங்களின் பூக்களில் தெளித்து மகரந்த சேர்க்கையை செய்கின்றனர்.[2]
முதல் இருபது பேரீச்சை உற்பத்தியாளர்கள் — 2009 (1000 மெற்றிக் தொன்கள்) | |
---|---|
எகிப்து | 1,350.00 |
ஈரான் | 1,088.04 |
சவூதி அரேபியா | 1,052.40 |
ஐக்கிய அரபு அமீரகம் | 759.00 |
பாக்கித்தான் | 735.28 |
அல்ஜீரியா | 600.70 |
ஈராக் | 507.00 |
சூடான் | 339.30 |
ஓமான் | 278.59 |
லிபியா | 160.10 |
தூனிசியா | 145.00 |
சீனா | 140.00 |
மொரோக்கோ | 72.00 |
யேமன் | 56.76 |
நைஜர் | 37.79 |
துருக்கி | 25.28 |
இசுரேல் | 22.19 |
கத்தார் | 21.60 |
மூரித்தானியா | 20.00 |
சாட் | 18.78 |
மொத்த உலக உற்பத்தி | 7462.51 (இற்கு மேல்) |
Source: ஐநா உணவு, வேளாண்மை அமைப்பு (FAO)[3] |
திகுலத்து நூர் பேரீச்சம் பழங்கள் | |
ஊட்ட மதிப்பீடு - 100 grams | |
---|---|
உணவாற்றல் | 1178 கிசூ (282 கலோரி) |
75.03 g | |
சீனி | 63.35 g |
நார்ப்பொருள் | 8 g |
0.39 g | |
2.45 | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ lutein zeaxanthin | (0%) 6 மைகி75 மைகி |
உயிர்ச்சத்து ஏ | 10 அஅ |
தயமின் (B1) | (5%) 0.052 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (6%) 0.066 மிகி |
நியாசின் (B3) | (8%) 1.274 மிகி |
(12%) 0.589 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (13%) 0.165 மிகி |
இலைக்காடி (B9) | (5%) 19 மைகி |
உயிர்ச்சத்து சி | (0%) 0.4 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (0%) 0.05 மிகி |
உயிர்ச்சத்து கே | (3%) 2.7 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (4%) 39 மிகி |
இரும்பு | (8%) 1.02 மிகி |
மக்னீசியம் | (12%) 43 மிகி |
மாங்கனீசு | (12%) 0.262 மிகி |
பாசுபரசு | (9%) 62 மிகி |
பொட்டாசியம் | (14%) 656 மிகி |
சோடியம் | (0%) 2 மிகி |
துத்தநாகம் | (3%) 0.29 மிகி |
நீர் | 20.53 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
அரபு நாடுகளில் ஏராளமான பேரீச்சை வகைகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில பின்வருமாறு:
தமிழ் | அரபு | தமிழ் | அரபு | தமிழ் | அரபு | தமிழ் | அரபு |
---|---|---|---|---|---|---|---|
அஃபந்தீ | أفندي | ஜுபைலீ | جبيلي | மக்தூமீ | مكتومي | ஸுவைத் | سويدا |
அஜ்வா | عجوة | கஈகா | كعيكه | மினைஃபீ | منيفي | ஷஹ்ல் | شهل |
அன்பரா | عنبرة | கலாஸ் | خلاص | மிஸ்கானீ | مسكاني | ஷலாபீ | شلابي |
பைள் | بيض | குள்ரீ | خضري | முஷௌகா | مشوكة | ஷுக்ரீ | شقري |
பர்னீ | برني | குஸாப் | خصاب | ரபீஆ | ربيعة | ஸுஃப்ரீ | صفري |
பர்ஹீ | برحي | லூனா | لونة | ரஷூதியா | رشوديه | ஸுக்கரீ | سكري |
கர் | غر | லுபானா | لبانة | ஸஃபாவீ | صفاوي | ஸுக்ஈ | صقعي |
ஹல்வா | حلوة | மப்ரூம் | مبروم | ஷைஷீ | شيشي | வனானா | ونانة |
ஹில்யா | حلية | மஜ்தூல் | مجدول | ஸாரியா | سارية | சாவீ | ذاوي |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.