பேரியம் மாங்கனேட்டு
From Wikipedia, the free encyclopedia
பேரியம் மாங்கனேட்டு (Barium manganate ) என்பது BaMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கனிம வேதியியலில் இச்சேர்மம் ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது.[2] மாங்கனீசு +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் வேதிச்சேர்மங்கள் வகையில் இச்சேர்மமும் இடம் பெறுகிறது. பேரியம் மாங்கனேட்டு, பெர்மாங்கனேட்டில் இருந்து வேறுபட்டதாகும். பெர்மாங்கனேட்டில் மாங்கனீசு(VII) இடம்பெற்றுள்ளது. பேரியம் மாங்கனேட்டு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி என்பதால், இது பரவலான ஆக்சிசனேற்ற வினைகளிலும் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
இனங்காட்டிகள் | |
---|---|
7787-35-1 | |
பண்புகள் | |
BaMnO4 | |
வாய்ப்பாட்டு எடை | 256.26 கி/மோல் |
தோற்றம் | இளம் நீலம் முதல் அடர் நீலம் வரை மற்றும் கருப்பு நிறத் தூள் |
அடர்த்தி | 4.85 கி/செ.மீ3 |
insoluble[1] | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | GHS03, GHS07: ஆக்சிசனேற்றும், தோல் மற்றும் கண்களை உறுத்தும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு