பேராங்
பேராங் (Behrang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். / From Wikipedia, the free encyclopedia
பேராங் (Behrang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 87 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 118 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள நகரம்.
விரைவான உண்மைகள் பேராங்Behrang பேராக், நாடு ...
ஆள்கூறுகள்: 3°47′N 101°30′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1800 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.pdtmuallim.perak.gov.my. |
மூடு
பேராங் நகரத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் தஞ்சோங் மாலிம் நகரம் உள்ளது. அதற்கும் அடுத்து 13 கி.மீ. தொலைவில் சிலிம் ரீவர் நகரம் உள்ளது.
பேராங் நகரத்திற்கு மிக அருகில் உள்ள இடங்கள் பேராங் உலு (Behrang Ulu); பேராங் ஸ்டேசன் (Behrang Stesen); கம்போங் கெலாவார் (Kampung Kelawar). பேராங் உலு பகுதியில் புகழ்பெற்ற நீர் அருவி உள்ளது. அதன் பெயர் சுங்கை பில் நீர் அருவி (Sungai Bil Waterfall). உள்ளூர் மக்களுக்கு மட்டும் அல்ல. நாடளவில் அனைவருக்கும் தெரிந்த இடமாகும்.[1]