மனித தொடர்புகளின் குரல் வடிவம் From Wikipedia, the free encyclopedia
பேச்சு (Speech) என்பது மனிதக் குரலின் மூலமாக மொழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொடர்பாடலாகும் . ஒவ்வொரு மொழியும் உயிரெழுத்து மற்றும் மெய் ஒலிகளின் ஒலிப்புச் சேர்க்கைகளைப் பயன்படுத்தி சொற்களின் ஒலியை உருவாக்குகிறது.
மொழியின் தோற்றம் பொதுவான பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருந்தாலும், தனித்துவமான மனிதப் பேச்சு தொடர்பான திறன்களின் படிவளர்ச்சிக் கொள்கையானது அறிவியல் ஆராய்ச்சியின் தனிப் பகுதியாக மாறியுள்ளது. [1] [2] [3] [4] [5] மொழியினை சைகை மூலமாகவோ அல்லது எழுத்துமொழி மூலமாகவோ புரிய வைக்க இயலும் என்பதனால் பேச்சு என்பது கட்டாயமில்லை.
குரங்குகள், மனிதரல்லாத குரங்குகள் மற்றும் மனிதர்கள் பல விலங்குகளைப் போலவே சமூக தொடர்பு நோக்கங்களுக்காக ஒலியை உருவாக்குவதற்கான சிறப்பு வழிமுறைகளை உருவாக்கியுள்ளனர். [6] ஆனால் இதற்காக அது தனது நாக்கைப் பயன்படுத்துவதில்லை. [7] [8] மனித இனங்கள் பேசுவதற்கு, நாக்கு, உதடுகள் மற்றும் பிற நகரக்கூடிய பாகங்களைப் பயன்படுத்துகிறது, இததகைய பரிணாம வளர்ச்சி பல அறிஞர்களின் பார்வையில் ஒரு புதிராகவே உள்ளது. [9]
புதைபடிவ தரவு போதுமானதாக இல்லாததால் மனிதப் பேச்சின் பரிணாம வளர்ச்சியின் காலக்கெடுவை தீர்மானிப்பது சவாலாக உள்ளது. மனிதக் குரல்வழி புதைபடிவமாக கிடைக்கவில்லை.
பக்கவாதம், [10] மூளைக் காயம்,[11] செவித்திறன் குறைபாடு, [12] வளர்ச்சி தாமதம், [13] ஒரு பிளவு அண்ணம், [14]பெருமூளை வாதம், [15] அல்லது உணர்ச்சிப் பிரச்சினைகளாலும் பேச்சு மற்றும் மொழிக் கோளாறுகள் ஏற்படலாம்.[16]
பேச்சு தொடர்பான நோய்கள், கோளாறுகள் மற்றும் நிலைமைகளுக்கு பேச்சு மொழி நோயியல் நிபுணர் அல்லது பேச்சு சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருத்துவர்கள் பேச்சுத் தேவைகளின் அளவை மதிப்பிடுகின்றனர், மதிப்பீடுகளின் அடிப்படையில் நோயறிதல்களைச் செய்கின்றனர், பின்னர் நோயின் தன்மைகளுக்கேற்ப சிகிச்சையளிக்கின்றனர். [17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.