பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Bank Negara Commuter Station மலாய்: Stesen Komuter Bank Negara); சீனம்: 国家银行) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து|கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் (Port Klang Line) அமைந்துள்ள இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-ஆம் ஆண்டில் மின்மயமாக்கப்பட்டது.[1]
பேங்க் நெகாரா Bank Negara | |||||||
---|---|---|---|---|---|---|---|
KA03 | |||||||
பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் | |||||||
பொது தகவல்கள் | |||||||
அமைவிடம் | 50480, டத்தோ ஓன் சாலை, கோலாலம்பூர், மலேசியா | ||||||
ஆள்கூறுகள் | 3°9′16″N 101°41′34″E | ||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||
தடங்கள் | சிரம்பான் வழித்தடம் கிள்ளான் துறைமுக வழித்தடம் கேடிஎம் கொமுட்டர் சேவை | ||||||
நடைமேடை | 2 நடை மேடை | ||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||
இணைப்புக்கள் | AG6 SP6 140 மீட்டர் பாதசாரி நடைபாதை வழியாக பண்டார் ராயா எல்ஆர்டி நிலையம் | ||||||
கட்டமைப்பு | |||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||
மற்ற தகவல்கள் | |||||||
நிலையக் குறியீடு | KA03 | ||||||
வரலாறு | |||||||
திறக்கப்பட்டது | 1995 | ||||||
மறுநிர்மாணம் | ஏப்ரல் 2007 | ||||||
மின்சாரமயம் | 1995 | ||||||
சேவைகள் | |||||||
|
தீபகற்ப மலேசியாவின் மற்றொரு தொடருந்து வழித்தடமான சிரம்பான் வழித்தடத்தை (Seremban Line) பயன்படுத்தும் கொமுட்டர் தொடருந்துகளும் இந்த பேங்க் நெகாரா நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த நிலையம் கோலாலம்பூர், டத்தோ ஓன் சாலையில் (Jalan Dato' Onn) அமைந்துள்ளது.[2]
பேங்க் நெகாரா மலேசியா (Bank Negara Malaysia) (BNM) என்பது மலேசியாவின் நடுவண் வங்கியாகும். 1959-ஆம் ஆண்டு, சனவரி 26-ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது. பணத்தை அச்சடித்தல்; மலேசிய அரசுக்கு நிதி ஆலோசகராகச் சேவை செய்தல்; போன்றவை இதன் முக்கியப் பணிகள் ஆகும்.
இதன் தலைமையகம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ளது. இந்த வங்கி மட்டுமே மலேசிய ரிங்கிட்டைப் புழக்கத்தில் வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் ஆகும். இதன் அருகில் தான் பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் உள்ளது.
தொடருந்து மின்மயமாக்கல் பணிகள் தொடங்குவதற்கு முன்பு, தற்போதைய கொமுட்டர் நிலையம் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் ஒரு நிறுத்தம் இருந்தது. எந்த வித வசதிகளும் இல்லாத ஓர் எளிய இடமாக இருந்தது. ஒரு வகையில் அது ஒரு பேருந்து நிறுத்தம் போல் இருந்தது. தொடருந்துகள் இந்தப் பாதையில் RM 1.00 க்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு 23 கிமீ தூரத்தில் இருந்த சுபாங் ஜெயா வரை பயணித்தன.
அதன்பின்னர் தொடருந்துகளின் உள்ளே பயணச்சீட்டுகள் விற்கப்பட்டன. பழைய நிறுத்தம் அகற்றப்பட்டு இப்போது மலைப்பகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. சற்றுத் தொலைவில் புதிய பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது.[3]
1990-ஆம் ஆண்டு மற்றும் 1994-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தொடருந்து மின்மயமாக்கல் (Railway Electrification in Malaysia) மற்றும் இரட்டைத் தண்டவாளக் கட்டுமானத்தின் போது இந்த நிறுத்தம் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டது.
1995-இல் கேடிஎம் கொமுட்டர் சேவை தொடங்கப் பட்டதில் இருந்து, இந்த நிறுத்தத்தில் தொடருந்து அமைப்பு மற்றும் தொடருந்து நிலைய வடிவமைப்பு ஆகிய இரண்டிலும் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்தது. 2007-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த நிறுத்தமானது குறிப்பிடத்தக்க அளவிற்கு புனரமைப்பு கண்டது.[4]
1995-ஆம் ஆண்டில் இருந்து, கிள்ளான் துறைமுக நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[5]
பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையத்தில் அடிப்படை வசதிகள் சற்றே குறைவு. பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) குறைவு. இது ஒரு நிறுத்தமே ஆகும். இரு ஒரு பெரிய நிலையம் அல்ல. இருப்பினும், நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.