பூம்பாறை
இந்தியாவின் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் / From Wikipedia, the free encyclopedia
பூம்பாறை என்பது இந்தியாவில், தமிழ் நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலை கிராமமாகும். இது பழனி மலைகளின் இதயம் போன்று இக்கிராமம் அமைந்துள்ளது. இது 1,920 மீட்டர் (6,300 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[2]