From Wikipedia, the free encyclopedia
புணே மாநகராட்சி (Pune Municipal Corporation (PMC, மராத்தி: पुणे महानगरपालिका, Puṇe Mahānagarpālikā) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே பெருநகரத்தின் குடிமைப் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி ஆகும். தற்போது புணே மாநகராட்சி 331.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3.4 மில்லியன் குடியிருப்பாளர்களையும் கொண்டுள்ளது.[10][11][12] 1949 வரை நகராட்சியாக இருந்த புனே, 15 பிப்ரவரி 1950-இல் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது.[13] புணே மாநகராட்சியின் ஆட்சி மன்றக் குழு மேயர் தலைமையில் துணை மேயர் மற்றும் 162 வார்டு உறுப்பினர்களால் ஆனது.[14] இதன் அன்றாட நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
புணே மாநகராட்சி पुणे महानगरपालिका Puṇe Mahānagarpālikā | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 15 பிப்ரவரி 1950[1] |
முன்பு | புணே நகராட்சி (1857-1950)[2] |
தலைமை | |
ஆணையாளர் | |
மேயர் | |
துணை மேயர் [7] | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 162 |
அரசியல் குழுக்கள் |
|
செயற்குழுக்கள் |
|
தேர்தல்கள் | |
First-past-the-post voting | |
தேர்தல்தேர்தல் | 1952[8] |
அண்மைய தேர்தல் | 21 பிப்ரவரி 2017[9] |
அடுத்த தேர்தல் | பிப்ரவரி 2022 (எதிர்பார்க்கப்படுகிறது) |
குறிக்கோளுரை | |
"वरं जनहितं ध्येयम" (சமசுகிருதம்) Varam janahitam dhyeyama (IAST) "For welfare of the public" | |
கூடும் இடம் | |
மாநகராட்சி கட்டிடம், சிவாஜி நகர், புனே | |
வலைத்தளம் | |
புணே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான புனே மாநகராட்சியானது, புனே நகர்புற தாலுகாவின் பகுதிகளை உள்ளட்டக்கியது. புனே மாநகராட்சி காவல் துறை ஆணையாளராக இந்தியக் காவல் பணி அதிகாரி உள்ளார்.
சூலை 2017-இல் புனே நகரத்தைச் சுற்றியுள்ள 8.07 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட 11 கிராமப்புற பகுதிகளும், 2,78,000 மக்களும் புனே மாந்கராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது புனே மாநகராட்சி 331.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.[10][11]
புனே மாநகராட்சியின் ஆட்சி மன்றக் குழு மேயர் தலைமையிலும், அன்றாட நிர்வாகம் ஆணையாளர் தலைமையிலும் மேற்கொள்ளப்படுகிறது.[15][16]
162 வார்டுகள் கொண்ட புனே மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக துணை ஆணையாளர் தலைமையில் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகத்தின் கீழ் மூன்று வார்டுக் குழு அலுவலகங்கள் உதவி இயக்குனர்கள் தலைமையில் செயல்படும்,[17][18] வார்டுக் குழு அலுவலகம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட வார்டுகளைக் கொண்டிருக்கும். [19]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.