பிளாக் ஆடம்
From Wikipedia, the free encyclopedia
பிளாக்கு ஆடம் (ஆங்கில மொழி: Black Adam)[6] என்பது 2022ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நியூ லைன் சினிமா, டிசி பிலிம்ஸ், செவென் பாக்ஸ் புரொடக்சன்சு மற்றும் ஃபிளின் பிக்சர் கோ ஆகியவை தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.
பிளாக்கு ஆடம் | |
---|---|
இயக்கம் | ஜாமே காலெட்-செர்ரா |
தயாரிப்பு |
|
கதை |
|
மூலக்கதை | பிளாக் ஆடம் படைத்தவர்
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | லாரன்ஸ் ஷெர்[3] |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 3, 2022 (2022-10-03) (மெக்சிக்கோ நகரம்) அக்டோபர் 21, 2022 (ஐக்கிய அமெரிக்கா) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $195–200 மில்லியன்[4][5] |
மொத்த வருவாய் | $159.3 மில்லியன் |
இது 2019 ஆம் ஆண்டு வெளியான ஷசாம்! என்ற திரைப்படத்தின் கிளைக்கதையாகவும், டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பதினோராவது திரைப்படமும் ஆகும். ஜாமே காலெட்-செர்ரா[7] என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆடம் ஸ்டிகியேல், ரோரி ஹைன்ஸ் மற்றும் சோஹ்ராப் நோஷிர்வானி ஆகியோர் திரைக்கதை எழுத, டுவெயின் ஜான்சன்,[8][9] நோவா சென்டினோ,[10] ஆல்டிஸ் ஹாட்ஜ், சாரா ஷாஹி, குயின்டெஸா ஸ்விண்டெல் மற்றும் பியர்ஸ் புரோஸ்னன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் அக்டோபர் 21, 2022 இல் அமெரிக்காவில் வெளியானது.[11]