![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/Philip-Gunawardena.jpg/640px-Philip-Gunawardena.jpg&w=640&q=50)
பிலிப் குணவர்தன
From Wikipedia, the free encyclopedia
டொன் பிலிப் ரூபசிங்க குணவர்தன (Don Philip Rupasinghe Gunawardena, சுருக்கமாக பிலிப் குணவர்தன; 11 சனவரி 1901 – 26 மார்ச் 1972) இலங்கை மார்க்சிய இடதுசாரி அரசியல்வாதி ஆவார். பிரித்தானிய இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியை இவர் தோற்றுவித்தார். இக்கட்சியே முதன் முதலாக இலங்கையில் திரொட்சுக்கியத்தை அறிமுகப்படுத்தியது. இவர் பின்னர் மகாஜன எக்சத் பெரமுன என்ற கட்சியை ஆரம்பித்தார். இலங்கை அரசாங்க சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்த இவர், 1956 முதல் 1959 வரை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் அரசில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், 1965 முதல் 1970 வரை டட்லி சேனாநாயக்கவின் அரசில் மீன்பிடி மற்றும் தொழிற்துறை அமைச்சராகவும் இருந்தார்.
விரைவான உண்மைகள் பிலிப் குணவர்தனPhilip Gunawardena, மீன்பிடி, மற்றும் தொழிற்றுறை அமைச்சர் ...
பிலிப் குணவர்தன Philip Gunawardena | |
---|---|
![]() | |
மீன்பிடி, மற்றும் தொழிற்றுறை அமைச்சர் | |
பதவியில் 1965–1970 | |
ஆட்சியாளர் | எலிசபெத் II |
பிரதமர் | டட்லி சேனாநாயக்க |
முன்னையவர் | டபிள்யூ ஜே. சி. முனசிங்க |
பின்னவர் | ஜோர்ஜ் ராஜபக்ச |
விவசாய மற்றும் உணவு அமைச்சர் | |
பதவியில் 1956–1959 | |
ஆட்சியாளர் | எலிசபெத் II |
பிரதமர் | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா |
முன்னையவர் | ஜே. ஆர். ஜெயவர்தன |
பின்னவர் | சி. பி. டி சில்வா |
இலங்கை நாடாளுமன்றம் for அவிசாவளை | |
பதவியில் 1956–1970 | |
முன்னையவர் | குசுமசிறி குணவர்தன |
பின்னவர் | பொனி ஜெயசூரிய |
பதவியில் 1947–1947 | |
பின்னவர் | குசுமசிறி குணவர்தன |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1901-01-11)11 சனவரி 1901 பொரலுகொடை, அவிசாவளை, இலங்கை |
இறப்பு | 26 மார்ச்சு 1972(1972-03-26) (அகவை 71) கொழும்பு, இலங்கை |
அரசியல் கட்சி | மகாஜன எக்சத் பெரமுன |
பிற அரசியல் தொடர்புகள் | லங்கா சமசமாஜக் கட்சி |
துணைவர் | குசுமசிறி குணவர்தன |
பிள்ளைகள் | இந்திக குணவர்தனா, பிரசன்னா குணவர்தன, லக்மலி குணவர்தன, தினேஷ் குணவர்தன, கீதாஞ்சன குணவர்தன |
முன்னாள் கல்லூரி | ஆனந்தா கல்லூரி கொழும்புப் பல்கலைக்கழகம் இலினோய் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
மூடு