பிரீத்தி ஜங்யானி (Preeti Jhangiani) 1980 ஆகஸ்ட் 18 இல் பிறந்த விளம்பர நடிகை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். அவர் "மொஹப்படின்" (2000) மற்றும் "ஆவரா பாகல் தீவானா" (2002) போன்ற படங்களில் தோன்றியதற்காக அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் பிரீத்தி ஜங்யானி, பிறப்பு ...
பிரீத்தி ஜங்யானி
பிறப்பு18 ஆகத்து 1980 (1980-08-18) (அகவை 44)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிModel, actress
வாழ்க்கைத்
துணை
Parvin Dabbas (2008–present)
மூடு

சுயசரிதை

பிரீத்தி ஜங்யானி மும்பை சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்..[1] இவர் முதலில் ராஜ்ஸ்ரீ புரொடக்சன்ஸ் வெளியிட்ட "யே ஹே பிரேம்" என்ற இசைத் தொகுப்பில் நடிகர் அப்பாஸுடன் நடித்தார், இதில் கோலா கரடியின் உருவம் பயன்படுத்தப்பட்டது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு, இவர் நிர்மா சந்தன சோப் விளம்பரங்கள் மற்றும் பல்வேறு விளம்பரங்களிலும் தோன்றினார்.

இவரது முதல் மலையாளத் திரைப்படம் நடிகர் குஞ்சாக்கொ போபனுடன் "மழவில்லு" என்ற திரைப்படத்தின் மூலம் அமைந்தது. மேலும் நடிகர் பவண் கல்யானுடன் "தம்முடு" மற்றும் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் "நரசிம்மநாயுடு" போன்ற இரு தெலுங்கு மொழிப் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். "மொஹப்படின்" (2000) என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார். இவரது அடுத்த இந்திப் படம் "ஆவரா பாகல் தீவானா" (2002) ஒரு நகைச்சுவைப் படமாகும். "சஜ்னா வே சஜ்னா" மற்றும் "பிக்கர் பாய் சென்டிமென்டல்" போன்ற பஞ்சாபித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது சமீபத்திய வெளியீடான ராஜஸ்தானி திரைப்படம் "டவ்டோ தி சன்லைட்"டிற்காக ராஜஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் இவருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது.[2] மற்றும் ராஜஸ்தான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான சிறப்பு ஜூரி விருதை வென்றது, திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.[3] சமீபத்தில் அவர் தி புஷ்கர் லாட்ஜில் தோன்றினார்.[4][5] இவர் தனது திருமணம் மற்றும் தாய்மைக்குப் பிறகு திரைப்படத் துறைக்கு மீண்டும் வருவதாக ப்ரீத்தி 2012 ல் குறிப்பிட்டார்.[6]

சொந்த வாழ்க்கை

இவர் கோபிந்த் ஜங்யானி மற்றும் மேன்கா ஜங்யானி ஆகிய இருவருக்கும் மகளாவார். 2008 மார்ச் மாதம் 23 ஆம் தேதி நடிகர் பர்வீன் தபாஸை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2011 ஏப்ரல் 11 அன்று ஜெய்வீர் என்ற முதல் மகன் பிறந்தான், பின்னர் , 2016 செப்டம்பர் 27 அன்று தேவ் என்ற இரண்டாவது மகன் பிறந்தான். மும்பையில் உள்ள பாந்த்ராவில் அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.