![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Institut_de_France_-_Acad%25C3%25A9mie_fran%25C3%25A7aise_et_pont_des_Arts.jpg/640px-Institut_de_France_-_Acad%25C3%25A9mie_fran%25C3%25A7aise_et_pont_des_Arts.jpg&w=640&q=50)
பிரான்சிய அகாதமி
From Wikipedia, the free encyclopedia
பிரான்சிய அகாதமி (Académie française (பிரெஞ்சு உச்சரிப்பு: [akademi fʁɑ̃ˈsɛz]), அல்லது பிரெஞ்சு அகாதமி, பிரான்சிய மொழியினைக் குறித்த அனைத்து விடயங்களுக்குமான முதன்மை பிரான்சிய அறிவுக் கழகமாகும். இது 1635ஆம் ஆண்டு லூயி XIII மன்னருக்கு முதன்மை அமைச்சராகவிருந்த கர்தினால் ரிசெலியுவினால் அலுவல்முறையாக நிறுவப்பட்டது.[1]1793ஆம் ஆண்டிலிருந்து பிரெஞ்சுப் புரட்சியின் போது இயங்காதிருந்த இந்த அகாதமியை 1803ஆம் ஆண்டில் நெப்போலியன் மீளமைத்தார்.[1] பிரான்சியக் கழகத்தின் ஐந்து அகாதமிகளில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும்.
பிரான்சிய அகாதமி Académie française | |
---|---|
![]() | |
குறிக்கோளுரை | À l'immortalité (அழிவற்றமை நோக்கி) |
துவங்கியது | 22 பெப்ரவரி 1635 |
தலைமையகம் | பாரிசு, பிரான்சு |
உறுப்புரிமை | 40 உறுப்பினர்கள் - லெ இம்மார்டெல்சு (அழிவற்றவர்கள்) என அறியப்படுகின்றனர் |
பொதுச் செயலாளர் | எலென் கார்ரெரெ டி'யான்கவுசு |
வலைத்தளம் | பிரான்சிய அகாதமி வலைத்தளம் |
அகாதமியில் லெ இம்மார்டெல்சு (அழிவற்றவர்கள்) என அறியப்படும் 40 உறுப்பினர்கள் உள்ளனர்.[2] புதிய உறுப்பினர்களை அகாதமியின் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர். உறுப்பினர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் பதவியிலுள்ளனர்; ஆனால் தீயநடத்தைக்காக நீக்கப்படலாம். முதல் உலகப் போரில் வெர்தூன் வெற்றியை அடுத்து பிரான்சின் மார்ஷலாக அறிவிக்கப்பட்ட பிலிப் பெடான் 1931இல் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்; ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது விஷியிலிருந்து செயல்பட்ட செருமனியின் கைப்பாவை பிரான்சிய அரசுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து 1945இல் பதவி விலக நேரிட்டது.[3] இந்த அமைப்பு பிரான்சிய மொழி குறித்த அலுவல்முறை ஆணையகமாகச் செயல்படும் பொறுப்பு கொண்டுள்ளது; இம்மொழியின் அலுவல்முறை அகரமுதலியை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Institut_de_France_-_Acad%C3%A9mie_fran%C3%A7aise_et_pont_des_Arts.jpg/640px-Institut_de_France_-_Acad%C3%A9mie_fran%C3%A7aise_et_pont_des_Arts.jpg)