பிம்பிசாரன் (சமஸ்கிருதம்: बिम्भिसार, கிமு 558 - [[கி 491) மகத நாட்டை கிமு 543 முதல் தன் இறுதி வரை ஆண்ட ஹரியங்கா வம்சத்தை சார்ந்த ஒரு அரசன்.[1] இவருடைய மகன் அஜாதசத்ரு ஆவார். இவர் கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவர்.[2]

விரைவான உண்மைகள் பிம்பிசாரன், ஹரியங்கா வம்சம்தின் நிறுவனர் ...
பிம்பிசாரன்
Thumb
கௌதம புத்தரை வரவேற்கும் மன்னர் பிம்பிசாரன்
ஹரியங்கா வம்சம்தின் நிறுவனர்
ஆட்சிக்காலம்அண்.கி மு 544 அண்.492 (52 ஆண்டுகள்)
முன்னையவர்பாட்டியா
பின்னையவர்அஜாதசத்ரு
பிறப்புகி மு 558
இறப்புகி மு 491
துணைவர்கோசல தேவி
செல்லனா
கேமா
குழந்தைகளின்
பெயர்கள்
அஜாதசத்ரு, அபயன்
அரசமரபுஹரியங்கா வம்சம்
தந்தைபாட்டியா
மதம்பௌத்தம், சமணம்
மூடு
Thumb
ராஜகிரகத்தில் பிம்பிசாரன் அடைக்கப்பட்டிருந்த சிறை

வாழ்க்கை

பௌத்த ஜாதக கதைகளில் இவரைப்பற்றி அறியக்கிடைக்கின்றன. இவர்புத்தரின் சமகாலத்தவர். இவர் அங்கதத்தை வென்று சம்பாவை தலைநகராகக் கொண்டு தன் மகன் அஜாத சத்ருவை ஆளச்செய்தார். புத்தர் ஞானம் பெறுவதற்குமுன் ஒரு முறை அவரை சந்தித்துள்ளார். புத்தர் ஞானம் பெற்ற பின் அவரின் முக்கிய சீடர்களில் ஒருவரானார். பௌத்தத்தில் ஒரு நிலையான சோத்பன்னத்தை அடையப்பெற்றதாக கூறப்படுகிறது.

சமண சமயக் குறிப்புகளில், இவரை ராஜகிரகத்தின் அரசன் ஷ்ரேனிக் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணங்கள்

இவர் அரசுகளுக்கிடையே தனது நிலையை திடப்படுத்தவே தனது திருமணங்களைப் பயன்படுத்தியுள்ளார். இவரது முதல் மனைவி கோசல நாட்டின் அரசனின் மகளும் பசேனதியின் தங்கையுமாவாள். இத்திருமணத்தின் மூலம், காசியை வரதட்சினையாகப்பெற்றார். இத்திருமணத்தின் மூலம் கோசலத்திற்கும் மகதத்திற்குமான பகை முடிவுக்கு வந்தது மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கிடையேயான உறவை தன்னிச்சைப்படி முடிவெடுக்கும் வசதியையும் பெற்றார். இவரது இரண்டாம் மனைவி லிச்சாவி வம்சத்தைச்சார்ந்த வைசாலி நாட்டைச்சார்ந்த செல்லனா ஆவாள். இவரது மூன்றாம் மனைவி கேமா, பஞ்சாபைச் சார்ந்த மத்திர நாட்டு மன்னர் மகளாவாள்.

மறைவு

வரலாற்றின்படி பிம்பிசாரன் தனது மகன் அஜாத சத்ருவினால் சிறைப்பிடிக்கப்பட்டு பசியினால் வாடி உயிர்நீத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வு கிமு 491 வாக்கில் நடந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.