![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Shanti_Stupa%252C_Rajgir.jpg/640px-Shanti_Stupa%252C_Rajgir.jpg&w=640&q=50)
ராஜகிரகம்
From Wikipedia, the free encyclopedia
ராஜகிரகம் (Rajgir) (House of the King or Royal House), இந்தியாவின், பிகார் மாநிலத்தில், நாலந்தா மாவட்டத்தில் அமைந்த பண்டைய கால நகரமாகும். மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது. இந்நகரம் பௌத்தம் மற்றும் சமணம் சமயங்களின் மையமாக விளங்கியது.[3] புத்தரும், மகாவீரரும் ராஜகிருகத்தில் தங்களின் போதனைகளை எடுத்துரைத்தனர். புத்தர் இந்நகரத்தின் சிறு மலைக்குச் சென்று அடிக்கடி தியானம் செய்வார். பௌத்தர்களுக்கு இந்நகரம் ஒரு புனித நகரமாகும். மகாபாரத இதிகாசத்தில், இந்நகரை ஆண்ட மன்னன் ஜராசந்தன் கிருஷ்ணரை பகைத்துக் கொண்டவன் என்றும் வீமன் ஜராசந்தனை மற்போரில் கொன்றான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் ராஜகிரகம் राजगीर, நாடு ...
ராஜகிரகம்
राजगीर | |
---|---|
நகரம் | |
![]() விஷ்வசாந்தி தூண், ராஜகிரகம் | |
நாடு | ![]() |
மாவட்டம் | பிகார் |
மண்டலம் | மகதம் |
கோட்டம் | பாட்னா |
மாவட்டம் | நாலந்தா மாவட்டம் |
நகராட்சி உறுப்பினர்கள் | 19 |
பரப்பளவு (2015) [A 1] | |
• City | 61.6 km2 (23.8 sq mi) |
• Regional planning | 517 km2 (200 sq mi) |
ஏற்றம் | 73 m (240 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 41,587 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 803116 |
தொலைபேசி குறியிடு எண் | +91-6112 |
வாகனப் பதிவு | BR-21 |
பாலின விகிதம் | 1000/889 ♂/♀ |
எழுத்தறிவு | 51.88% |
நாடாளுமன்ற தொகுதி | நாலந்தா |
சட்ட மன்றத் தொகுதி | ராஜகிரகம் |
இணையதளம் | nalanda |
மூடு
ராஜகிரகம் பாட்னா நகரத்திலிந்து 100 கி மீ தொலைவில் உள்ளது. பாட்னா மற்றும் புதுதில்லியிலிருந்து தொடருந்து மற்றும் பேருந்து வசதியுள்ளது.