பலெம்பாங்
இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திராவிலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
பலெம்பாங் (Palembang, ஜாவி: ڤلامبڠ) என்பது மேடானுக்கு அடுத்ததாய் உள்ள சுமத்திரா தீவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இது இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். பலெம்பாங் மலாய் தீவுக்கூட்டம் மற்றும் தென்கிழக்காசியாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இது தெற்கு சுமாத்திராவின் கிழக்கு கடற்கரையில் உள்ள முசுனி நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பலெம்பாங் 374.03 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்பளவைக் கொண்டது ஆகும். 2013ன் மக்கள் தொகை அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1,742,186 குடிகளைக் கொண்டுள்ளது.[1] பலெம்பாங் இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுரபயா, பண்டுங், மேடான், செமாராங் மற்றும் மக்காசாருக்கு அடுத்ததாய் உள்ள ஏழாவது மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் 26வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் போட்டியை 2011ல் நவம்பர் 11 தொடக்கம் 22வரை ஜகார்த்தாவுடன் இணைந்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பலெம்பாங் | |
---|---|
அடைபெயர்(கள்): "பூமி சிரிவிஜய (Bumi Sriwijaya, The Land of Srivijaya)" | |
குறிக்கோளுரை: Palembang BARI (Bersih, Aman, Rapi, Indah) (Palembang: Clean, Safe, Neat, and Beautiful) | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | தெற்கு சுமாத்திரா மாகாணம் |
Incorporated (city) | 16 சூன் 683 |
அரசு | |
• நகர முதல்வர் | H. Romi Herton (2013-2018) |
• Vice Mayor | H. Harnojoyo (2013-2018) |
பரப்பளவு | |
• மொத்தம் | 374.03 km2 (144.41 sq mi) |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 17,42,186 |
• அடர்த்தி | 4,858/km2 (12,580/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இடக் குறியீடு | +62 711 |
இணையதளம் | kota.palembang.go.id/ |
பலெம்பாங் இந்தோனேசியாவிலுள்ள மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாக விளங்குவதுடன் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய சிறீவிஜய இராச்சியத்தினதும், சக்திவாய்ந்த மலாய் இராச்சியத்தினது தலைநகராக விளங்கிய வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.[2][3]
பலெம்பாங்கின் முக்கிய இடங்களாகக் கருதப்படுபவை இந்நகரத்தை இரண்டாகப் பிரித்துள்ள முசுனி ஆறும் மற்றும் அம்பேரா பாலமும் ஆகும். பலெம்பாங்கிலுள்ள முசுனி ஆற்றின் வடக்கு ஆற்றங்கரை சேபேராங் இலீர் (Seberang Ilir) என்று அழைக்கப்படுகிறது, மற்றும் பலெம்பாங்கிலுள்ள முசுனி ஆற்றின் தெற்கு ஆற்றங்கரை சேபேராங் உலு (Seberang Ulu) என்றும் அழைக்கப்படுகிறது. சேபேராங் இலீரே பலெம்பாங்கின் பொருளாதார மற்றும் கலாசார மையமாக விளங்குகிறது, மற்றும் சேபேராங் உலுவே பலெம்பாங்கின் அரசியல் மையமாக விளங்குகிறது.