![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/COLLECTIE_TROPENMUSEUM_Chinees_huis_in_Semarang_TMnr_60022048.jpg/640px-COLLECTIE_TROPENMUSEUM_Chinees_huis_in_Semarang_TMnr_60022048.jpg&w=640&q=50)
செமாராங்
இந்தோனேசியாவின் நடுச்சாவக மாகாணத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
செமாராங் நகரம் இந்தோனேசியாவின் சாவகத் தீவின் வட கரையில் அமைந்துள்ள ஒரு பெரு நகராகும். மத்திய சாவக மாகாணத்தின் தலை நகரான செமாராங் நகரின் பரப்பளவு 225.17 சதுர கிலோ மீற்றர் ஆகும். ஒன்றரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்நகரம் இந்தோனேசியாவின் ஐந்தாவது பெரிய நகரமாகும்.[1] இந்நகரின் அமைவிடம் 6°58′S 110°25′E ஆகும். நெதர்லாந்து காலனியாதிக்க காலத்திலிருந்து இன்று வரை இந்நகரம் இந்தோனேசியாவின் முக்கிய துறைமுக நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களையும் ஒருங்கே கொண்ட இந்நகரில் இந்தோனேசியச் சீனர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/COLLECTIE_TROPENMUSEUM_Chinees_huis_in_Semarang_TMnr_60022048.jpg/640px-COLLECTIE_TROPENMUSEUM_Chinees_huis_in_Semarang_TMnr_60022048.jpg)
விரைவான உண்மைகள் செமாராங், நாடு ...
செமாராங் | |
---|---|
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | மத்திய சாவகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 225.17 km2 (86.94 sq mi) |
மக்கள்தொகை (2003) | |
• மொத்தம் | 13,93,000 |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இணையதளம் | www.semarang.go.id |
மூடு