![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7b/Montage_of_Surabaya.jpg/640px-Montage_of_Surabaya.jpg&w=640&q=50)
சுராபாயா
இந்தோனேசியாவின் கிழக்குச் சாவக மாகாணத்திலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சுராபாயா (Surabaya, முன்னதாக சொராபாயா, சோரெபாயா அல்லது சுராபயா) இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதன் மக்கள் தொகை 3.1 மில்லியனாகும். பெருநகரப் பகுதியில் இதன் மக்கள் தொகை 5.6 மில்லியனாக உள்ளது. இது கிழக்கு சாவக மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகின்றது. கிழக்கு சாவகத் தீவின் வடக்கு கடற்கரையோரமாக மாசு ஆற்றின் முகத்துவாரத்தில் மதுரா நீரிணையின் ஓரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சுராபாயா சுரோபோயோ, நாடு ...
சுராபாயா
சுரோபோயோ | |
---|---|
நகரம் | |
![]() இடது மேலிருந்து, வலச்சுற்றாக: சுராபாயா உயிரியல் பூங்காவில் சுரா, பாயா சிலைகள், சுராமடு பாலம், நாயகர்களின் நினைவகம், துஞ்சங்கன் பிளாசா. | |
அடைபெயர்(கள்): நாயகர்களின் நகரம் | |
குறிக்கோளுரை: மினுக்கும் சுரபயா | |
![]() கிழக்குச் சாவகத்தில் சுராபாயாவின் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
மாநிலம் | கிழக்கு சாவகம் |
குடியேற்றம் | மே 31, 1293 |
அரசு | |
• மேயர் | திரி ரிசுமாகரினி |
• உதவி மேயர் | விசுனு சக்தி புயனா |
பரப்பளவு | |
• நகரம் | 374.78 km2 (144.70 sq mi) |
• மாநகரம் | 1,805.08 km2 (696.95 sq mi) |
ஏற்றம் | 5 m (16 ft) |
மக்கள்தொகை (2012 [1]) | |
• நகரம் | 31,14,700 |
• அடர்த்தி | 8,300/km2 (22,000/sq mi) |
• பெருநகர் | 56,22,259 |
• பெருநகர் அடர்த்தி | 3,100/km2 (8,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இடக் குறியீடு | +62 31 |
License plate | L |
இணையதளம் | surabaya.go.id |
மூடு
இந்தோனேசிய தேசியப் புரட்சியின் போது இந்தோனேசிய விடுதலைக்கு இந்தோனேசிய நாட்டிலும் பன்னாட்டளவிலும் ஆதரவு கிட்ட சுராபாயாச் சண்டை பெரிதும் காரணமாக இருந்தது; இதனால் சில இந்தோனேசியர்கள் இந்த நகரத்தை "நாயகர்களின் நகரம்" என அழைக்கின்றனர். இங்கு தான் இந்தோனேசியாவின் முதல் அரசுத்தலைவர் சுகர்ணோ பிறந்தார்.