இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
பாரூக் மரைக்காயர் (எம். ஓ. ஆசன் பாரூக் மரைக்காயர், செப்டம்பர் 6, 1937 - சனவரி 26, 2012) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுவை சட்டப் பேரவைத் தலைவராக இருமுறையும்,புதுச்சேரி முதலமைச்சராக மும்முறையும், எதிர்க்கட்சி தலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். தேசிய அரசியலில் மும்முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மாணவராக இருந்தபோது 1953-54 ஆண்டுகளில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரியின் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மும்பையில் உள்ள மத்திய ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக 1975 முதல் 2000 ஆண்டுவரை இருந்தார்.[1]. சவுதி அரேபியாவில் இந்திய அரசின் தூதராக 2004 முதல் பணிபுரிந்து வந்தார்.[2]. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுனராகவும் [3]. கேரள ஆளுனராகவும் இருந்தார்.[4]
எம். ஓ. ஹாசன் பாரூக் மரைக்காயர் | |
---|---|
2010இல் பாரூக் மரைக்காயர் | |
நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) - புதுச்சேரி | |
பதவியில் 1991–1998 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாச்பாய், எச். டி. தேவகௌடா, ஐ. கே. குஜ்ரால், அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | பி. சண்முகம் |
பின்னவர் | எஸ். ஆறுமுகம் |
பதவியில் 1999–2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | எஸ். ஆறுமுகம் |
பின்னவர் | எம். ராமதாஸ் |
பாண்டிச்சேரி முதலமைச்சர் | |
பதவியில் ஏப்ரல் 9, 1967 – மார்ச் 6, 1968 | |
ஆளுநர் | எஸ். எல். சிலம், பி. டி. ஜட்டி |
முன்னையவர் | வி. வெங்கடசுப்பா ரெட்டியார் |
பின்னவர் | வி. வெங்கடசுப்பா ரெட்டியார் |
பதவியில் மார்ச் 17, 1969 – சனவரி 3, 1974 | |
ஆளுநர் | பி. டி. ஜட்டி, செடிலால் |
முன்னையவர் | ஆளுனர் ஆட்சி |
பின்னவர் | சுப்பிரமணியன் ராமசாமி |
பதவியில் மார்ச் 16, 1985 – சனவரி 19, 1989 | |
ஆளுநர் | திரிபுவன் பிரசாத் திவாரி, ரஞ்சித் சிங் தயாள் |
முன்னையவர் | ஆளுனர் ஆட்சி |
பின்னவர் | ஆளுனர் ஆட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காரைக்கால்,புதுவை | செப்டம்பர் 6, 1937
இறப்பு | சனவரி 26, 2012 (அகவை 74) சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரஸ் |
துணைவர் | கதீஜாநாச்சியா |
பிள்ளைகள் | 1 மகன், 2 மகள் |
தொழில் | அரசியல்வாதி |
As of நவம்பர் 23, 2003 மூலம்: |
பாரூக் மரைக்காயர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.