பாபுசர் கணவாய்
பாக்கித்தானிலுள்ள ஒரு மலைப்பாதை / From Wikipedia, the free encyclopedia
பாபுசர் கணவாய் (Babusar Pass) அல்லது பாபுசார் டாப் ( Babusar Top) (உயரம் 4,173 மீட்டர்கள் or 13,691 அடிகள் ) [1] [2] என்பது பாக்கித்தானின் வடக்கே 150 கிமீ (93 மைல்கள்) நீளமுள்ள ககன் பள்ளத்தாக்கின் ஒரு மலைப்பாதையாகும் இது காரகோரம் நெடுஞ்சாலைலையில் சிலாசுடன் தக் நலா வழியாக இணைக்கிறது. ககன் பள்ளத்தாக்கின் மிக உயரமான இடமாகவும் இது உள்ளது. தானுந்துகளால் இதனை எளிதில் அணுக முடியும்.
பாபுசர் கணவாய் | |
---|---|
درہ بابوسر | |
ஏற்றம் | 4,173 மீ (13,691 அடி) |
Traversed by | தேசிய நெடுஞ்சாலை எண்-15 |
அமைவிடம் | ககன் பள்ளத்தாக்கு, மன்சேரா மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
ஆள்கூறுகள் | 35°8′46.46″N 74°2′53.41″E |
பாபுசர் கணவாய் கைபர் பக்துன்வாவை கில்கிட்-பால்டிஸ்தானுடன் இணைக்கிறது. [3] பாக்கித்தானின் மிகவும் ஆபத்தான பாதைகளில் இதுவும் ஒன்றாகும். உலகிலேயே மிகவும் ஆபத்தான மலைச் சரிவுகளால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல மரணங்கள் நிகழ்கின்றன. [3] 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முகலாயப் பேரரசர் பாபுர் இந்தப் பகுதி வழியாகச் சென்றதால் உருவான பாபுசர் டாப் முதலில் பாபர் டாப் என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், தற்போது இது பொதுவாக பாபுசர் டாப் என்று குறிப்பிடப்படுகிறது. [4]