பாபநாசம் வட்டம்
From Wikipedia, the free encyclopedia
பாபநாசம் வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாபநாசம் நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், மெலட்டூர், சாலியமங்கலம், அம்மாப்பேட்டை என 6 உள்வட்டங்களும், 120 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.