ஒரு தாவர குடும்பம் From Wikipedia, the free encyclopedia
பபேசியே என்பது (தாவர வகைப்பாட்டியல்: Fabaceae) பூக்கும் தாவரங்களிலுள்ள, மூன்றாவது பெரிய குடும்பம் ஆகும்.[5] இக்குடும்பம், மிகவும் பொருளாதார முக்கியத்துவம் உடையது[6]. இக்குடும்பத்தில் 732[7]பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 19,400 இனங்களும் உள்ளன. உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்ப, மிதவெப்ப மண்டல
நாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 100 பேரினங்களும், 754 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளன. தமிழில் இதன் பெயரை அவரைக் குடும்பம் அல்லது பருப்பினக் குடும்பம் எனலாம்.
விரைவான உண்மைகள் பபேசியே (Fabaceae) புதைப்படிவ காலம்:Paleocene–Recent, உயிரியல் வகைப்பாடு ...
வேர்: வேர் முண்டுகளைக் கொண்ட கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பு. வேர்முண்டுகளில் நைதரசனை நிலைநிறுத்தும் ரைசோபியம் லெகுமினோசாரம் (Rhizobium leguminosarum) என்ற பாக்டீரியாக்கள் உள்ளன.
தண்டு: நிலத்தின் மேல் காணப்படும். நந்த தண்டுடையது (எ.கா.) கிளைட்டோரியா தெர்னேசியா (Clitoria ternatea) (சங்குப்பூ) அல்லது கட்டைத்தன்மையுடைய தம்டு (எ.கா.)தால்பெர்ச்சியா இலாட்டிஃபோலியா (Dalbergia latifolia)
இலைகள், மாற்றிலை அமைவில் உள்ளன. இலையடிச் செதிலையும். சிற்றிலையடிச் செதிலையும், அதைப்பு உடையனவாகவும், வலைப்பின்னல் நரம்பமைவையும் கொண்டுள்ளன.
இனப்பெருக்க வட்டம்
இணர் (பூந்துணர், பூங்கொத்து, மஞ்சரி): வழக்கமாக நுனிவளர் பூந்துணர்[8] (Racemose)
(எ.கா. குரோட்டலேரியா வெருகோசா (Crotalaria verrucosa L.[கு 1] = கிலுகிலும்பை);
பானிக்கிள் (எ.கா. தால்பெர்சியா இலாட்டிஃபோலியா - Dalbergia latifolia Roxb (ஏற்றுக்கொள்ளப்பட்டது)[கு 2] அல்லது இலைக்கோணத்தில் தனிமலர் (எ.கா. கிளைட்டோரியா தெர்னிசியா = Clitoria ternatea )[கு 3]
மலர்: பூவடிச் செதிலுடையது.[9] பூக்காம்புச் செதிலுடையது. பூக்காம்புடையது. முழுமையானது. இருபால்தன்மை கொண்டது, ஐந்தங்கமலர்.[10] இரு உறைகள் உடையது. இருபக்க சமச்சீருடையது மற்றும் சூலக மேல் மலரைப் பெற்றுள்ளது.
தூள்தண்டுகள்: மொத்தம் பத்து உள்ளன. வழக்கமாக இருகற்றைகளையுடையவை. கிளைட்டோரியா தெர்னேசியாவில் ('Clitoria ternatea) ஒன்பது பூந்தூள் இழைகள் இணைந்தும், ஒன்று தனித்தும் (9)+1 என்ற நிலையில் உள்ளன. ஆசுக்கினோமினி ஆசுப்பிரா (Aeschynomene aspera) தாவரத்தில் பூந்தூள் இழைகள் இருகற்றைகளாக (5)+(5) இணைந்து காணப்படுகின்றன. குரோட்டலேரியா வெருகோசா (Crotalaria verrucosa) தாவரத்தில் 5 பூந்தூள் இழைகள் நீளமாகவும், மற்ற 5 பூந்தூள் இழைகள் நீளம் குறைந்து குட்டையாகவும் காணப்படுகின்றன. இவ்வாறு பூந்தூள் இழைகள் இருவேறு மட்டங்களில் உள்ளன. மேலும், பூந்தூள் பைகள் இரு உருவங்களில் உள்ளன, 5 பூந்தூள் பைகள் நீண்டும், ஈட்டி போன்றும். 5 பூந்தூள் பைகள் சிறியனவாகவும் நுனி மழுங்கியும் காணப்படும். இத்தகைய பூந்தூள் தாள் வட்டம் ஒருகற்றை இருமட்ட ஈருருவ பூந்தூள் தாள் வட்டம் எனப்படும், பூந்தூள் பைகள் இரு அறைகளையுடையவை. அடி இணைந்த பூந்தூள் இழைகள். நீள்வாக்கில் வெடிக்கும் இயல்புடையவை ஆகும்.
சூலகம்: மேல் மட்ட சூற்பையுடையது. ஒரு சூலக இலையுடையது. சூற்பை காம்புடையது. ஒரு சூலறையுடையது. ஒன்று அல்லது பல சூல்கள், விளிம்பு சூல் ஒட்டு முறையில் உள்ளன. சூல் தண்டு தனித்தது. உட்புறமாக வளைந்தது. சூல்முடி தட்டையாக அல்லது தூவிகளுடன் காணப்படும்.
கனி: இருபுற வெடிகனி (legume). கருவுறுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு. அராக்கிசு ஃகைபோசியா (Arachis hypogaea) தாவரமலரின் சூற்பைக் காம்பு, ஆக்கத்திசுவாக மாறி, வளர்ச்சி அடைந்து, கருவுற்ற சூற்பையை மண்ணிற்குள் செலுத்துகிறது. எனவே, நிலக்கடலை மண்ணிற்கு அடியில் உற்பத்தியாகிறது.
Wojciechowski, M. F.; Lavin, M.; Sanderson, M. J.(2004)."A phylogeny of legumes (Leguminosae) based on analysis of the plastid matK gene resolves many well-supported subclades within the family".American Journal of Botany91(11): 1846–62.doi:10.3732/ajb.91.11.1846.பப்மெட்:21652332.
Schrire, B. D.; Lewis, G. P.; Lavin, M. (2005). "Biogeography of the Leguminosae". In Lewis, G; Schrire, G.; Mackinder, B.; Lock, M. (eds.). Legumes of the world. Kew, England: Royal Botanic Gardens. pp.21–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-900347-80-6.