![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Batu_Arang_roundabout_with_heritage_town_monument.jpg/640px-Batu_Arang_roundabout_with_heritage_town_monument.jpg&w=640&q=50)
பத்து ஆராங்
பத்து ஆராங் (ஆங்கிலம்: Batu Arang, சீனம்: 煤炭山) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில்; கோம்பாக் மாவட்டத / From Wikipedia, the free encyclopedia
பத்து ஆராங் (ஆங்கிலம்: Batu Arang, சீனம்: 煤炭山) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில்; கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். கோலாலம்பூரில் இருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவிலும் மிகப் பழமையான நகரங்களில் பத்து ஆராங் நகரமும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் பத்து ஆராங்Batu Arang, நாடு ...
பத்து ஆராங் Batu Arang | |
---|---|
![]() பத்து ஆராங் நகரத்தின் நினைவுச் சின்னம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°19′02.7″N 101°28′17.6″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 18-ஆம் நூற்றாண்டு |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 = |
அஞ்சல் குறியீடு | 48100 |
தொலைபேசி எண் | +6-03 |
வாகனப் பதிவெண் | B |
மூடு
மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் பத்து ஆராங் நகரம் தனி ஒரு வரலாற்றைப் பெற்று உள்ளது. மர்மங்கள் நிறைந்த நகரம் என்றும் பேசப் படுகின்றது. பத்து ஆராங் நகரம் தான் மலேசியாவிலேயே முதன்முதலாக ஒரு சோவியத் கம்யூனிச நகரமாக அறிவிக்கப் பட்டது.[1] மார்க்ஸ் – லெனின் சித்தாந்தங்களுக்கு விளக்கு ஏற்றி வைத்த முதல் கிராமப்புற நகரம். மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மலாயா என்று அழைக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சி நடந்தது.