![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/Aleppo_old_city_image.jpg/640px-Aleppo_old_city_image.jpg&w=640&q=50)
பண்டைய அலெப்போ நகரம்
From Wikipedia, the free encyclopedia
பண்டைய அலெப்போ நகரம் (Ancient City of Aleppo) பண்டைய அண்மை கிழக்கின் தற்கால சிரியா நாட்டில் உள்ளது. தற்போதும் இதன் பெயர் அலெப்போ என்றெ அழைக்கப்படுகிறது.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
![]() பண்டைய அலெப்போ நகரத்தின் காட்சி | |
அமைவிடம் | அலெப்போ, சிரியா |
உள்ளடக்கம் | 2010-இல் அலெப்போ அரண்மனை மற்றும் அல்-மதீனா நகர வீதி |
கட்டளை விதி | பண்பாட்டுக் களம்: (iii), (iv) |
உசாத்துணை | 21 |
பதிவு | 1986 (10-ஆம் அமர்வு) |
அழியும்நிலை | 2013– |
பரப்பளவு | 364 ha (1.41 sq mi) |
ஆள்கூறுகள் | 36°12′09″N 37°09′46″E |
2014-இல் சிரிய உள்நாட்டுப் போர் துவங்குவதற்கு முன்னர் அலெப்போ நகரத்தின் 12-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான கட்டிடங்களும், அரண்மனைகளும் பழுதின்றி பராமரிக்கப்பட்டு வந்தது.
பண்டைய அலெப்போ நகரத்தைச் சுற்றிலும் கோட்டைச் சுவர்களுடன் 350 ஹெக்டேர் (860 ஏக்கர்; 3.5 சகிமீ) நிலப்பரப்பும், 1,20,000 மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.[1]
பெரிய குடியிருப்புகளும், பெரிய கடை வீதிகளும், சிறிய தெருக்களும் கொண்ட பண்டைய அலெப்போ நகரத்தை, 1986-இல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[2][3]
பண்டைய அலெப்பொ நகரத்தின் உலகப் பாரம்பரிய கட்டங்களும், சின்னங்களும் சிரிய உள்நாட்டுப் போரில் இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.[4][5][6][7][8]