இசுலாமிய அரசு
From Wikipedia, the free encyclopedia
இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு (ஆங்கில மொழி: Islamic State in Iraq and the Levant, அரபி மொழி: الدولة الاسلامية في العراق والشام) சுருக்கமாக ISIL அல்லது ஐசிஸ் (ISIS) என்று அழைக்கப்படுகிறது. இசிஸ் இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது சிரியா மற்றும் ஈராக்கிலும் வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா[1] போன்ற பிரதேசங்களிலும் இயங்குகிறது. இசிஸ் இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும்.[2] இக்குழுவானது ஈராக் போரின் போது உருவாக்கப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டில் இசிஸ் இயக்கம் அல் காயிதாவுடன் இணைந்து செயல்பட்டது. இது சுன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஈராக் பகுதிகளில் கலீபா ஆட்சியை நிறுவி பின்னர் அவ்வாட்சியை சிரியாவுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றது. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல் காயிதா இசிஸ் உடனான தனது தொடர்பை முறித்துக் கொண்டது.[3] இக்குழுவானது அல் காயிதாவை விடவும் அபாயகரமான குழு என நிபுணர்கள் கருதுகின்றனர்.[4] மேலும் இவ்வமைப்பிற்கு ஆதரவாக இருப்போம் என போகோ அராம் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.[5]
இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு الدولة الاسلامية في العراق والشام | |
---|---|
கொடி | |
நிலை | Unrecognized state |
தலைநகரம் | ஹுசைபா |
ஆட்சி மொழி(கள்) | அரபி மொழி |
அரசாங்கம் | இஸ்லாமிய ஆட்சி |
நேர வலயம் | ஒ.அ.நே+3 |