பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது.,[1] இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.

விரைவான உண்மைகள் Silk Road, வழித்தட தகவல்கள் ...
Silk Road
Thumb
பட்டுப் பாதையின் முக்கிய தடங்கள்
வழித்தட தகவல்கள்
Time period:Around 114 BCE – 1450s CE
அலுவல் பெயர்Silk Roads: the Routes Network of Chang'an-Tianshan Corridor
வகைCultural
வரன்முறைii, iii, iv, vi
தெரியப்பட்டது2014 (38th session)
உசாவு எண்1442
RegionAsia-Pacific
மூடு

பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.

பட்டுப் பாதை என்ற சொல்லுக்கு நிகரான Seidenstraße என்னும் ஜெர்மானியச் சொல்லை, 1877-இல், இப்பாதைக்கும் பெயராக வைத்தவர் பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் (Ferdinand von Richthofen) என்னும் ஜெர்மானியப் புவியியலாளர் ஆவார்.

வடக்குச் சீனாவின் வணிக மையங்களுக்கு அப்பால், பட்டுப் பாதை, வடக்கிலும் தெற்கிலுமாக இரு கூறாகப் பிரிந்து செல்கின்றது. வடக்குப் பாதை, புல்கர்-கிப்சாக் (Bulgar–Kypchak) பகுதியூடாக கிழக்கு ஐரோப்பாவுக்கும், கிரீமியன் தீவக்குறை க்கும் (Crimean peninsula) சென்று அங்கிருந்து, கருங்கடல், மர்மாராக் கடல் என்பவற்றைக் கடந்து பால்கன் பகுதியூடாக வெனிசை அடைகின்றது.

தெற்குப் பாதை, துருக்கிஸ்தான்-கோராசான் ஊடாக மெசொப்பொத்தேமியா, அனதோலியா சென்று அங்கிருந்து தெற்கு அனதோலியாவிலுள்ள அண்டியோச் ஊடாக மத்தியதரைக் கடலுக்கோ அல்லது, லேவண்ட் ஊடாக எகிப்துக்கும், வட ஆபிரிக்காவுக்குமோ செல்கிறது.

பண்டை காலத்தில் முக்கிய வர்த்தகர்கள் இந்தியர்கள் மற்றும் பாக்ட்ரியன் மக்கள். பின்னர் 5-ஆம் நூற்றாண்டில் இருந்து 8-ஆம் நூற்றாண்டு வரை சொக்டியன் வர்த்தகர்களும், பின்னர் அரபு மற்றும் பாரசீக வர்த்தகர்களும் பட்டுப்பாதையை பயன்படுத்தினர்.

பெயர் காரணம்

Thumb
Thumb
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள கல்லறை எண் 1 இருந்து, கி.மு. 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹான் வம்சத்தினாரின் நெய்யப்பட்ட பட்டு ஜவுளி.

இந்த விரிவான கண்டம் முழுவதும் இணைக்கும் வகையிலான வர்த்தக பாதைகளில் ஒரு இலாபகரமான சீன பட்டு வணிகம் நடைபெற்று வந்த காரணத்தினால், இப்பாதைக்கு பட்டுப்பாதை என்று பெயர் வந்தது.[2][3]

வரலாறு

கண்டம் விட்டு கண்டம் பயணம்

விலங்குகளை கொல்லைப்படுத்தல் மற்றும் கப்பல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கலாச்சார பரிவர்த்தனை மற்றும் வணிகம் வேகமாக வளர்ந்தது. மேலும், அங்கிருந்த புல்வெளி வளமான மேய்ச்சல், நீர் தேவைகளை பூர்த்தி செய்ததோடு வணிகர்கள் எளிதாக புழங்குவதற்கும் வழிவகுக்கிறது. ஆசியாவின் பரந்த புல்வெளி விவசாய நிலங்களுக்குள் புகாமல், பசிபிக் கடற்கரையில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா வரை மகத்தான தொலைவு பயணம் செய்ய வியாபாரிகளுக்கு உதவியது.

சீன மற்றும் மத்திய ஆசிய தொடர்புகள்

கி.மு. 1070 ஐ சேர்ந்த சீன பட்டின் சில பகுதிகள் பண்டைய எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் போதியளவு நம்பகமாக தெரிகிறது என்றாலும், துரதிருஷ்டவசமாக அது ஒரு வகை சீனாவில் பயிரிடப்பட்ட பட்டா அல்லது மத்திய தரைக்கடல் பகுதியில் அல்லது மத்திய கிழக்கில் இருந்து வந்த பட்டா என துல்லியமாக சரிபார்க்க முடியாது.[4]

பட்டு பாதை திறப்பு

கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் சீனாவின் டாயுவான், பார்த்திய மற்றும் பக்திரிய நாடுகளுடனான அரசாங்க உறவு பேணும் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியா மற்றும் மேற்கத்திய உலகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சாலை உருவானது. இந்த பட்டுப்பாதை மக்கள் பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தை பரிமாறி கொள்ள வாய்ப்பு கொடுத்து.[5]

மங்கோலிய காலம்

சுமார் 1207 ல் இருந்து 1360 வரை ஆசிய கண்டம் முழுவதும் மங்கோலிய விரிவாக்கம் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டுவந்ததோடு மீண்டும் பட்டு பாதையை (காரகொரம் வழியாக) நிறுவ உதவின. இது உலக வணிகத்தின் மீது இஸ்லாமிய கலிபாவின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. மங்கோலியர்கள் வாணிக வழித்தடங்களில் ஆதிக்கம் செலுத்தியதால், அப்பகுதியில் மேலும் வர்த்தகம் வளர்ந்தது. மங்கோலியர்களுக்கு மதிப்பற்றதாக இருந்த ஒரு பொருள் மேற்கில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்பட்டது. இதன் விளைவாக, மங்கோலியர்கள் மேற்கிலிருந்து பல ஆடம்பரமான பொருட்களை பெற்றனர்.

வீழ்ச்சி

ஐரோப்பாவில் ஆரம்ப நவீனத்தின் காரணமாக பிராந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்தன. ஆனால் பட்டுப்பாதையில் இது ஒரு எதிர் தாக்கத்தை ஏற்படுத்தியது. மங்கோலிய பேரரசின் ஒருங்கிணைப்பை தக்க வைக்க முடியாமல் வர்த்தகம் குறைந்தது.

கொன்ஸ்டான்டிநோபிளில் ஒட்டோமன் மேலாதிக்கத்தை தொடர்ந்து 1453 யில் பட்டுப்பாதை வழியே வணிகம் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது. அந்நாளைய ஒட்டோமான் ஆட்சியாளர்கள் மேற்கத்திய எதிர்ப்பாளார்களாக இருந்தனர்.

நவீன காலம்

யுரேசிய நில பாலம் சில நேரங்களில் "புதிய சில்க் சாலை" என குறிப்பிடப்படுகிறது. பட்டுப்பாதை வழியாக உள்ள ரயில் பாதையின் கடைசி இணைப்பபாக, 1990 ல் சீனா மற்றும் கஜகஸ்தான் ரயில் அமைப்புகள் அலாட்டா கணவாயில் இணைக்கப்பட்டுள்ளது.[6]

1993 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு அமைதி மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காக ஒரு சர்வதேச திட்டத்தை ஆரம்பித்தது.[7]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.