வெனிசு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
வெனிஸ் (அல்லது வெனிசு, இத்தாலிய மொழி: Venezia) இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.[1][2][3]
Comune di Venezia வெனிஸ் நகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 45°26′N 12°19′E | |
மண்டலம் | வெனீட்டோ |
மாகாணம் | வெனிஸ் மாகாணம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 412 km2 (159 sq mi) |
ஏற்றம் | 0 m (0 ft) |
மக்கள்தொகை (January 1, 2004) | |
• மொத்தம் | 2,71,251 |
• அடர்த்தி | 646/km2 (1,670/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 |
இணையதளம் | www.comune.venezia.it |
கால்வாய்களின் நகரம் என்று அழைக்கப்படும் இந்நகருக்கு அருகில் கடல்பகுதியில் ஏற்பட்ட புயலின் காரணமாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி அதிக அளவு கடல் நீர் உட்புகுந்தது. அப்போது ஏற்பட்ட அலையின் உயரம் 1.4 மீட்டரைத் தாண்டியதாக இத்தாலிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இதன் காரணமாக இந்நகரின் 50 சதவீதம் தண்ணிருக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது[4].
Seamless Wikipedia browsing. On steroids.