![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/Nungambaakkam_railway_station2.jpg/640px-Nungambaakkam_railway_station2.jpg&w=640&q=50)
நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம்
சென்னை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் / From Wikipedia, the free encyclopedia
நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம் (Nungambakkam railway station, நிலையக் குறியீடு:NBK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் நுங்கம்பாக்கம், பொது தகவல்கள் ...
நுங்கம்பாக்கம் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
![]() நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருவெங்கடபுரம், சூலைமேடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13.065363°N 80.232742°E / 13.065363; 80.232742 | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | NBK | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1900களின் முற்பகுதி | ||||
மின்சாரமயம் | 1931 | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
மூடு
இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், சூளைமேடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 11 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இரயில் நிலையத்தின் தென்பகுதியில், சென்னை இலயோலாக் கல்லூரி இருப்பதால், எப்போதும் பரபரப்பாகவே இந்த நிலையம் காணப்படுகிறது.