![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Iraq%253B_Nimrud_-_Assyria%252C_Lamassu%2527s_Guarding_Palace_Entrance.jpg/640px-Iraq%253B_Nimrud_-_Assyria%252C_Lamassu%2527s_Guarding_Palace_Entrance.jpg&w=640&q=50)
நிம்ருத்
From Wikipedia, the free encyclopedia
நிம்ருத் (Nimrud) (/nɪmˈruːd/; அரபு மொழி: النمرود) தற்கால ஈராக் நாட்டின் நினிவே ஆளுநகரகத்தில் மோசுல் நகரத்திற்கு தெற்கில் 20 கிமீ தொலைவில் உள்ள பண்டைய நகரம் ஆகும். நிம்ருத் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
நிம்ருத் | |
---|---|
![]() மனிதத் தலையும், கழுகின் சிறகுகள் மற்றும் சிங்கத்தின் உடலைக் கொண்ட லம்மசு சிற்பம், மன்னர் இரண்டாம் அசூர்நசிபால் அரண்மனை, இதனை 2016ல் இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்து தகர்த்தனர்.[1] | |
மாற்றுப் பெயர் | சலா, கலாக், கல்ஹு |
இருப்பிடம் | நூமானியா, நினிவே ஆளுநகரகம், ஈராக் |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 36°5′53.49″N 43°19′43.57″E |
வகை | உலகப் பாரம்பரியக் களம் |
பரப்பளவு | 3.6 km2 (1.4 sq mi) |
வடக்கு மெசொப்பொத்தேமியாவில் டைகிரீஸ் ஆற்றின் கரையில் அமைந்த நிம்ருத் நகரம்[2], கிமு 879 முதல் 706 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.
இந்நகரம் கிமு 1350 முதல், கிமு 612ல் நினிவே போர் முடியும் வரை பண்டைய அசிரியாவின் முக்கிய நகரமாக விளங்கியது.
நிம்ருத் நகரம் 360 ஹெக்டெர் பரப்பளவு கொண்டது.[3] பண்டைய நிம்ருத் நகரத்தின் அழிபாடுகள், தற்போதைய ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தின், மோசுல் நகரத்திற்கு தென்கிழக்கில் 30 கிமீ தொலவில் உள்ள அசிரியக் கிராமமான நூமானியாவில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிம்ருத் தொடர்பான அகழாய்வுகள் 1845, 1879 மற்றும் 1949 முதல் நடைபெற்றது.
நிம்ருத் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியத் தொல்பொருட்கள் ஈராக் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு உள்ளது.[4][5]
விவிலியம் காலத்திய புது அசிரியப் பேரரசர் நிம்ரோத்தின் பெயரால் இந்நகரம் நிம்ருத் என அழைக்கப்படுகிறது.[6][7]