நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு சட்டப் பேரவை பாஜக உறுப்பினர் / From Wikipedia, the free encyclopedia
நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியைச்சேர்ந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும், 2011 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அ. இல சு. இலட்சுமணன் என்பவரிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் இதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட அ. இல சு. இலட்சுமணன் என்பவரை 3800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இந்தத் தேர்தல்களில் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார். நயினார் நாகேந்திரன் 2001-2006 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[சான்று தேவை] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாரளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தார்.[3][4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து, பாசக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]
நயினார் நாகேந்திரன் | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 02 மே 2021 | |
தொகுதி | திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1960-10-16)16 அக்டோபர் 1960 பணகுடி, தண்டையார்குளம், திருநெல்வேலி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சந்திரா |
பிள்ளைகள் | நயினார் பாலாஜி விஜய் சண்முக நயினார் காயத்ரி |