தைவானில் பௌத்தம், தைவான் நாட்டின் சீன மக்களின் மூன்று முக்கியச் சமயங்களில் மகாயானத்தின் தேரவாத பௌத்தமும் ஒன்றாக உள்ளது. உள்ளூர் மக்கள் திருமணம் மற்றும் இறப்புச் சடங்குகளில் தாவோயியம் சமயத்துடன், தேரவாத பௌத்த சமயச் சடங்குகளையும் கடைப்பிடிக்கின்றனர். [1]
தைவான் மக்கள் தொகையில் முப்பத்தைந்து விழுக்காட்டினர் (35%) பௌத்த சமயத்தை பின்பற்றுகின்றனர்.[2]
தைவான் அரசு பௌத்தம் மற்றும் தாவோவியம் சமயங்களை பிரித்து கணக்கிட்டாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் இரண்டு சமயங்களும் ஏறத்தாழ ஒரே அளவில் உள்ளது. தைவான் நாட்டில் 2005ல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த தைவான் மக்கள் தொகையான 23 மில்லியனில் தேரவாத பௌத்த சமயத்தினர் 80 இலட்சமும் (எட்டு மில்லியன்), தாவோவிய சமய மக்கள் 76 இலட்சமுமாக (7.6 மில்லியன்) இருந்தனர். [3]
Chandler, Stuart. Establishing a Pure Land on Earth: The Foguang Buddhist Perspective on Modernization and Globalization. University of Hawaii Press, 2004.
Laliberte, Andre. "The Politics of Buddhist Organizations in Taiwan: 1989-2003" RoutledgeCurzon, 2004.
Madsen, Richard. Democracy's Dharma: Religious Renaissance and Political Development in Taiwan. University of California Press, 2007.
David Schak and Hsin-Huang Michael Hsiao, «Taiwan’s Socially Engaged Buddhist Groups», China perspectives [Online], 59 | May - June 2005, Online since 1 June 2008, connection on 2 September 2012. URL: http://chinaperspectives.revues.org/2803