தேயிலை (Tea, Camellia sinensis) ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்பட்டது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. குக்கிச்சாவில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.

Thumb
Camellia sinensis
விரைவான உண்மைகள் தேயிலை, உயிரியல் வகைப்பாடு ...
தேயிலை
Thumb
Camellia sinensis இலைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Ericales
குடும்பம்:
Theaceae
பேரினம்:
கமேல்லியா Camellia
இனம்:
C. sinensis
இருசொற் பெயரீடு
Camellia sinensis
(L.) Kuntze
மூடு
Thumb
தன்சானியாவில் தேயிலை பறிக்கும் காட்சி

இந்நிலைத்திணையின் இருசொற்பெயர் Camellia sinensis என்பதாகும், இங்கு sinensis என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். Camellia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661–1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுபிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய கரோலஸ் லின்னேயஸ் அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.[1][2][3]

தேயிலையின் வரலாறு

தேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.[சான்று தேவை] இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840–50 களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.

இந்தியத் தேயிலை

இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும்.

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.

இமயமலையின் பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை டார்ஜிலிங் தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண்வளம் மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் டார்ஜிலிங் தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும். டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை ருஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, போலந்து, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தேயிலை விளையும் பிற நாடுகள்

தேயிலை சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.

தேயிலை வகைகள்

தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.