தென்னிசு இரிட்சி
From Wikipedia, the free encyclopedia
தென்னிசு மெக்காலிசிட்டர் இரிட்ச்சி (டென்னிஸ் ரிட்ச்சி, Dennis MacAlistair Ritchie, செப்டம்பர் 9, 1941 – அக்டோபர் 08, 2011)[1][2][3][4][5] என்பவர் அமெரிக்க கணினி அறிவியலாளர் ஆவார். இவர் சி நிரலாக்க மொழியை உருவாக்கி வளர்த்தெடுத்தார், ஏனைய நிரலாக்க மொழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தினார், கென் தாம்ப்சன், பிறையன் கேர்னிகன், டக்லசு மெக்கில்ராய், ஜோ ஒசானா போன்ற பெல் ஆய்வுகூட பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கினார். இதன் பயனாக பெரும் புகழ் ஈட்டினார். 1983 ஆம் ஆண்டில் கணிப்பொறி குழுமம் (கபொகு (ACM)) வழங்கும் டூரிங் விருதும், 1990 இல் ஐஇஇஇ வழங்கும் ஆமிங் பதக்கமும் (Hamming Medal), 1998 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத்துக்கான அமெரிக்காவின் உயர் தேசிய விருதும் ஆகிய விருதுகள் இவருக்குக் கிடைத்தன. இரிட்சி பெல் ஆய்வுகூடங்களில் இலூசெண்ட் டெக்னாலாச்சீசு ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
தென்னிசு மெக்காலிசிட்டர் இரிட்ச்சி Dennis MacAlistair Ritchie | |
---|---|
பிறப்பு | (1941-09-09)செப்டம்பர் 9, 1941 புரொங்க்ஃசுவில், நியூயோர்க், ஐஅ |
இறப்பு | அக்டோபர் 8, 2011(2011-10-08) (அகவை 70) பெர்க்லி ஃகைட்ஃசு, நியூ செர்சி, ஐஅ |
துறை | கணினி அறிவியல் |
பணியிடங்கள் | லூசெண்ட் டெக்னாலாச்சீசு பெல் ஆய்வுகூடங்கள் |
கல்வி கற்ற இடங்கள் | ஃகார்வர்டு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | ஆல்ட்ரான் பி BCPL சி மல்ட்டிக்ஸ் யுனிக்சு |
விருதுகள் | டூரிங் விருது தொழில்நுட்பத்துக்கான தேசிய விருது |