From Wikipedia, the free encyclopedia
தென்னாபிரிக்க ஒன்றியம் (Union of South Africa) என்பது தற்போதைய தென்னாபிரிக்கக் குடியரசின் முன்னாளைய அமைப்பாகும். இவ்வொன்றியம் மே 31, 1910 இல் முன்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளாயிருந்த கேப், நட்டால், டிரான்ஸ்வால், ஒரேஞ்சு தனி மாநிலம் ஆகியவற்றை இணைத்து இவ்வொன்றியத்தின் மாகாணங்களாக உருவாக்கப்பட்டது.[1][2][3]
தென்னாபிரிக்க ஒன்றியம் Union of South Africa Unie van Suid-/Zuid-Afrika | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1910–1961 | |||||||||||||||
குறிக்கோள்: Ex Unitate Vires (இலத்தீன்: ஒற்றுமையில் இருந்து, வலிமை} | |||||||||||||||
நாட்டுப்பண்: Die Stem van Suid-Afrika | |||||||||||||||
நிலை | பொதுநலவாய அமைப்பு | ||||||||||||||
தலைநகரம் | கேப் டவுன் (சட்டப்படி) பிரிட்டோரியா (நிர்வாக) Bloemfontein (நீதி) | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | ஆபிரிக்கான்ஸ், டச்சு, ஆங்கிலம் | ||||||||||||||
அரசாங்கம் | அரச்சியலமைப்பு முடியாட்சி | ||||||||||||||
அரசி | |||||||||||||||
• 1952-1961 | இரண்டாம் எலிசபெத் | ||||||||||||||
ஆளுநர் | |||||||||||||||
• 1959-1961 | சார்ல்ஸ் ரொபேர்ட்ஸ் சுவார்ட் | ||||||||||||||
பிரதமர் | |||||||||||||||
• 1958-1961 | ஹெண்ட்ரிக் வேர்வோர்ட் | ||||||||||||||
சட்டமன்றம் | நாடாளுமன்றம் | ||||||||||||||
• மேலவை | செனட் | ||||||||||||||
• கீழவை | அசெம்பிளி | ||||||||||||||
வரலாறு | |||||||||||||||
• இணைப்பு | மே 31 1910 | ||||||||||||||
டிசம்பர் 11, 1931 | |||||||||||||||
• குடியரசு | மே 31 1961 | ||||||||||||||
பரப்பு | |||||||||||||||
1961 | 2,045,320 km2 (789,700 sq mi) | ||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||
• 1961 | 18216000 | ||||||||||||||
நாணயம் | தென்னாபிரிக்க பவுன் | ||||||||||||||
|
இது முதலில் ஒரு தன்னாட்சி உரிமையுள்ள நாடாக (dominion) அமைக்கப்பட்டு பின்னர் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது. இவ்வொன்றியம் மே 31, 1961 இல் கலைக்கப்பட்டு தென்னாபிரிக்கக் குடியரசு என்ற பெயரில் குடியரசானது.
கனடா, அவுஸ்திரேலியா போன்ற கூட்டமைப்புகள் போலல்லாமல் தென்னாபிரிக்க ஒன்றியம் ஒரு தனிநாடாக விளங்கியது. நான்கு குடியேற்ற நாடுகளினதும் நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட்டு அவை மாகாண அமைப்பாக மாற்றப்பட்டன. அசெம்பிளி, செனட் என இரு அவைகள் அமைக்கப்பட்டன. இவற்றின் உறுப்பினர்களை பொதுவாக நாட்டின் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையினத்தவர்களே தெரிவு செய்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.