![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Montage_Toulouse_2.jpg/640px-Montage_Toulouse_2.jpg&w=640&q=50)
துலூஸ்
From Wikipedia, the free encyclopedia
துலூஸ் (பிரெஞ்சு: Toulouse) என்பது பிரான்சின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 590 கிமீ தூரத்தில் உள்ளது. 2008 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 439,553 அதாவது பிரான்சிலேயே நான்காவது (பாரிஸ், மர்சேய் மற்ற லியோனுக்கு பிறகு) மிகப்பெரிய நகரமாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Montage_Toulouse_2.jpg/640px-Montage_Toulouse_2.jpg)
ஏர்பஸ் (Airbus), ஐரோப்பிய நிறுவனத் தலைமையகம் துலூஸில் தான் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் துலூஸ் - பிளாக்னாக், பாரிஸ் ஆர்லி இடையேயான விமானப் பாதை பரபரப்பான விமானப் பாதை ஆகும். இது 2014 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் பயணிகளைக் கொண்டு சென்றது.[1] எல் எக்ஸ்பிஸ் மற்றும் சாலன்ஜ் என்பவற்றின் தரவரிசைப்படி பிரான்சின் ஆற்றல் வாய்ந்த நகரங்களில் துலூஸும் ஒன்றாகும்.[2]
ஐந்தாம் நூற்றாண்டில் விசிகோதிக் இராச்சியத்தின் தலைநகராகவும், இடைக்காலத்தின் பிற்பகுதியில் லாங்குவேடோ மாகாணத்தின் தலைநகராகவும், நவீன காலத்தின் ஆரம்பத்திலும் தலைநகராக திகழ்ந்தது. தற்போது தெற்கு பிரான்சின் ஆக்சிடோனியா பிராந்தியத்தின் தலைநகராகும். இளஞ்சிவப்பு டெரகோட்டா செங்கற்களால் ஆன தனித்துவமான கட்டிடக்கலை கொண்ட இந்நகரம் லா வில்லே ரோஸ் ("பிங்க் சிட்டி") என்ற புனைப்பெயரைப் கொண்டது. தூலுஸில் யுனேஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் இரண்டு கணக்கிடப்பட்டுள்ளது.[3]