![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/CairoEgMuseumTaaMaskMostlyPhotographed.jpg/640px-CairoEgMuseumTaaMaskMostlyPhotographed.jpg&w=640&q=50)
துட்டன்காமன்
From Wikipedia, the free encyclopedia
துட்டன்காமூன் அல்லது தூத்தான்காமூன் (Tutankhamun, கிமு 1341 – கிமு 1323) என்பவன் புது எகிப்திய இராச்சியத்தின் பதினெட்டாவது வம்சத்தின் 13-வது மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புது எகிப்திய இராச்சியத்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனான்.[6] பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் துட்டன்காட்டன் என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "அமூன் கடவுளின் உயிருள்ள படிமம்" என்பதாகும்[7]. இவனது பெயர் எகிப்திய மொழியில் தூத்து-அன்கு-ஆமூன் என்பது ஆகும். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார். கோப்திய (Coptic) மொழியில், அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் அமூன் என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.
துட்டன்காமன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
துட்டன்காமென், துட்டன்காதென் [1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1332 – 1323, புது எகிப்து இராச்சியம், எகிப்தின் பதினெட்டாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | அரசி நெபெர்நெப்ரதென் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஆய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | அன்கேசெனமூன் (சகோதரி) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | 2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | அக்கெனதென் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | கிமு 1341 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1323 (வயது 18–19) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | KV62 |
1922ஆம் ஆண்டில் லக்சர் நகரத்தில் உள்ள மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 62-இல் துட்டன்காமன் கல்லறை கண்டிபிடிக்கப்பட்டது.[8]பண்டைய எகிப்தை ஆண்ட துட்டன்காமூன் விண்கல்லால் ஆன கத்தியைப் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[9][10]
![பார்வோன் துட்டன்காமனின் சிற்பம், லாஸ் ஏஞ்சலீஸ் அருங்காட்சியகம்](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b8/Tutankhamun_Los_Angeles_2018.jpg/640px-Tutankhamun_Los_Angeles_2018.jpg)
![பார்வோன் துட்டன்காமனின் கல்லறைச் சுவர் சித்திரங்கள்](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Egypt.KV62.01.jpg/320px-Egypt.KV62.01.jpg)