From Wikipedia, the free encyclopedia
திலக் மாரப்பன (Tilak Marapana) இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார். சட்டம், ஒழுங்கு, மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்தங்களுக்கான அமைச்சராகவும், பாதுகாப்பு, மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும், சட்டமா அதிபராகவும் பதவி வகித்தவர்.[1]
திலக் மாரப்பன Tilak Marapana | |
---|---|
சட்டம், ஒழுங்கு, மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்தங்களுக்கான அமைச்சர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2015 – 9 நவம்பர் 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
முன்னையவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
பின்னவர் | சாகல ரத்நாயக்கா, தே. ம. சுவாமிநாதன் |
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், மற்றும் வான்பறப்பியல் அமைச்சர் | |
பதவியில் 2002 – ஏப்ரல் 2004 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
முன்னையவர் | காமினி அத்துக்கோரளை |
பின்னவர் | ? |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 12 டிசம்பர் 2001 – நவம்பர் 2003 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
பின்னவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
36வது சட்டமா அதிபர் | |
பதவியில் சூலை 1992 – ஆகத்து 1994 | |
குடியரசுத் தலைவர் | ஆர். பிரேமதாசா டி. பி. விஜயதுங்க சந்திரிக்கா குமாரதுங்க |
முன்னையவர் | சந்திரா டி சில்வா |
பின்னவர் | சிப்லி அசீசு |
36வது Solicitor General of Sri Lanka | |
பதவியில் 1990–1992 | |
குடியரசுத் தலைவர் | ஆர். பிரேமதாசா |
முன்னையவர் | எஸ். டபிள்யூ. பி. வதுகோதப்பிட்டிய |
பின்னவர் | சிப்லி அசீசு |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 ஆகத்து 2015 | |
பதவியில் 2001–2005 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | ஸ்டேல்லா மாரப்பன |
பிள்ளைகள் | ஜானக்க சமித் |
வாழிடம் | இரத்தினபுரி |
முன்னாள் கல்லூரி | புனித தோமையர் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
மாரப்பன இரத்தினபுரியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி பி. மாரப்பனவின் மகன் ஆவார். கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்ற இவர் வேதியியல், கணிதம், மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.[2]
மாரப்பன இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் 1968 ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார்.[2] 1988 இவர் சனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றார்.[2] 1992 முதல் 1994 வரை சட்டமா அதிபராகப் பணியாற்றினார்.[3]
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2002 இல் போக்குவரத்துத் துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. 2015 இல் தேசியப் பட்டியலில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1] மைத்திரிபால சிறிசேனவின் அரசில் இவருக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர் பதவி 2014 செப்டம்பர் 4 இல் வழங்கப்பட்டது. இவர் அவன்காட் (மிதக்கும் ஆயுதக்கப்பல்) விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளையடுத்து 2015 நவம்பர் 9 இல் பதவி விலகினார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.