திரிபுரா முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
திரிபுரா முதலமைச்சர், இந்திய மாநிலமான, திரிபுராவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
{{{body}}} திரிபுரா முதலமைச்சர் | |
---|---|
நியமிப்பவர் | திரிபுரா ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | சச்சிந்திர லால் சிங் |
உருவாக்கம் | 1 சூலை 1963 |
1963 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒன்பது பேர் திரிபுரா முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். இம்மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சச்சிந்திர லால் சிங் என்பவர் பதவி வகித்தார். பின்னர் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் 1998 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, இம்மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலமாகப் பணியாற்றினார்.[1] பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிப்லப் குமார் தேவ் என்பவர் 9 மார்ச், 2018 ஆம் ஆண்டு முதல் மே 14, 2022 வரை பதவி வகிக்கித்தார். இவரே இம்மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல், முதலமைச்சர் ஆவார்.[2] தற்பொழுது பிப்லப் தேவ் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து மாணிக் சாகா முதல்வராக பதவி ஏற்கின்றார்.[3]