தி போஸ்ட் (திரைப்படம்)
2017 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க அரசியல் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
தி போஸ்ட் (The Post) என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் [8][9] லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு, தயாரித்து இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் ஆவார். இந்த படத்தின் நட்சத்திரங்களான மெரில் ஸ்ட்ரீப் கேதரின் கிராகாமாகவும், டொம் ஹாங்க்ஸ் பென் பிராட்லீயாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1970களின் துவக்கத்தில் 30 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போர் குறித்து தி வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என அப்போது உண்மையாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
தி போஸ்ட் The Post | |
---|---|
இயக்கம் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் |
தயாரிப்பு |
|
கதை |
|
இசை | ஜான் வில்லியம்ஸ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜானஸ் கமன்ஸ்ஸ்கி |
படத்தொகுப்பு |
|
கலையகம் | |
விநியோகம் |
|
வெளியீடு | திசம்பர் 14, 2017 (2017-12-14) (Newseum) திசம்பர் 22, 2017 (United States) |
ஓட்டம் | 116 நிமிடங்கள்[5] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $50 மில்லியன்[6] |
மொத்த வருவாய் | $33.9 மில்லியன்[7] |
படத்திற்கான துவக்க ஒளிப்படங்கள் 2017 மே மாதம் நியூயாரக் நகரில் எடுக்கப்பட்டன. திரைப்படமானது 2017 திசம்பர் 14 அன்று வாஷிங்டன், டி.சி. யில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் 2017 திசம்பர் 22, அன்று குறைவான பகுதிகளில் வெளியிடப்பட்டது. பின்னர் அது 2018 சனவரி 12 அன்று பரந்த அளவில் வெளியிடப்பட்டு, உலகளவில் $ 33 மில்லியன் வசூலைப் பெற்றது.