From Wikipedia, the free encyclopedia
தி நவம்பர் மேன் 2014ஆம் ஆண்டு திரைக்குவந்த அமெரிக்க நாட்டு உளவாளி அதிரடித்திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரோஜர் டொனால்ட்சன் என்பவர் இயக்க, பியர்ஸ் புரோஸ்னன், லுக் ப்ரேசி, ஓல்கா குர்லியங்கோ, எலிசா டயலோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பிரபல ஆங்கில நாவலாசிரியர் பில் கிரேன்ஞ்சர் எழுதிய தேர் ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி வெளியானது.
தி நவம்பர் மேன் The November Man | |
---|---|
தமிழ் சுவரொட்டி | |
இயக்கம் | ரோஜர் டொனால்ட்சன் |
இசை | மார்கோ பெல்ட்ராமி |
நடிப்பு | பியர்ஸ் புரோஸ்னன் லுக் ப்ரேசி ஓல்கா குர்லியங்கோ எலிசா டயலோர் |
ஒளிப்பதிவு | Romain Lacourbas |
படத்தொகுப்பு | ஜான் கில்பர்ட் |
விநியோகம் | ரிலேட்டிவிட்டி மீடியா |
வெளியீடு | ஆகத்து 27, 2014 |
ஓட்டம் | 108 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $15 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $24.9 மில்லியன்[3] |
இந்த திரைப்படம் ஆகஸ்ட் 27, 2014ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.
இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 29, கோத்ரா மூவீஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியானது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் மார்கோ பெல்ட்ராமி இசையமைத்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.