தி. க. சண்முகம்
நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் (26.4.1912 - 15.2.1973) 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர்.[1] நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர்.[2] ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். இவரது தம்பி தி. க. பகவதி புகழ்பெற்ற நாடக நடிகரும், திரைப்பட நடிகரும் ஆவார்.
விரைவான உண்மைகள் தி. க. சண்முகம், பிறப்பு ...
தி. க. சண்முகம் | |
---|---|
![]() ஔவை | |
பிறப்பு | திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் (1912-04-26)ஏப்ரல் 26, 1912 திருவனந்தபுரம் |
இறப்பு | பெப்ரவரி 15, 1973(1973-02-15) (அகவை 60) சென்னை |
தொழில் | நாடக நடிகர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இரண்டாம் வகுப்பு |
துணைவர் | சீதாலட்சுமி |
பிள்ளைகள் | மகன்: தி. க. ச. கலைவாணன் |
மூடு