Remove ads
From Wikipedia, the free encyclopedia
தம்லக் அல்லது தம்லுக் (Tamluk) (/ˈtæmlʊk/) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது வங்காள விரிகுடா அருகில் ரூப்நாராயண் ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரத்தின் பண்டைய பெயர் தாம்ரலிப்தா ஆகும். இது ஹவுராவிலிருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
தம்லக்
| |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22.3°N 87.92°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தம்லக் நகராட்சி |
ஏற்றம் | 7 m (23 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 65,306 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காளி[1][2] |
• கூடுதல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 721636 |
தொலைபேசி குறியீடு | 91-3228 |
வாகனப் பதிவு | WB 29-xxxx, WB 30-xxxx |
மக்களவைத் தொகுதி | தம்லக் |
சட்டமன்றத் தொகுதி | தம்லக் |
இணையதளம் | purbamedinipur |
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14489 வீடுகள் கொண்ட தம்லுக் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 65,306 ஆகும். அதில் 33260 ஆண்கள் மற்றும் 32046 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6180 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.18% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் , முஸ்லீம்கள் , கிறித்தவர்கள் , சமணர்கள் , மற்றும் பிறர் ஆகவுள்ளனர்.[3]
தம்லுக் தொடருந்து நிலையம், ஹவுரா-நாக்பூர்-மும்பை-சென்னை போன்ற நகரங்களை இணைக்கிறது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.