தம்புனான் மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தம்புனான் மாவட்டம்; (மலாய்: Daerah Tambunan; ஆங்கிலம்: Tambunan District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். தம்புனான் மாவட்டத்தின் தலைநகரம் தம்புனான் (Tambunan Town).
தம்புனான் மாவட்டம் | |
---|---|
Tambunan District | |
சபா | |
ஆள்கூறுகள்: 5°40′26.47″N 116°21′53.58″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | உட்பகுதி |
தலைநகரம் | தம்புனான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,347 km2 (520 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 35,667 |
இணையதளம் | ww2 |
தம்புனான் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். தம்புனான் மக்களில் பெரும்பாலோர் நெல், காய்கறிகள், மீன் பண்ணை, ரப்பர் தோட்டம், பனை எண்ணெய் தோட்டம், பொது ஊழியம் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்கள். 2021-ஆண்டு வரையில், தம்புனானில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பெரிய தொழில் மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.
இந்த மாவட்டம் சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து கிழக்கே 80 கி.மீ. தொலைவில்; கோத்தா கினாபாலு - தம்புனான் - கெனிங்காவ் நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டு உள்ளது. இரானாவ் நகருக்கு தெற்கே 48 கி.மீ. மற்றும் கெனிங்காவ் நகரில் இருந்து வடக்கே 48 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]