From Wikipedia, the free encyclopedia
பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலகட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று பல ஆய்வாளர்களும், அறிஞர்களும் கூறுகின்றனர். பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின் நீள அளவை முறைகள் தரப்படுத்தப் பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச் சொல்லமுடியும். தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் பெரும் அளவான கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும், அதிகார பூர்வமாக வெளியிடப்படாமலும், இருப்பதால் தென்னிந்தியாவின் அறிவியலை முழுதாக இன்னும் அறியமுடிவதில்லை.[1]
பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. பின்வரும் பட்டியல், வாய்பாடுகள் பண்டைய தமிழர்கள் உருவாக்கிய அளவை முறைகள் ஆகும்.
பழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும் இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள் ஆகும். அவை
முதன்மைக் கட்டுரை: தமிழ் எண்கள், தமிழ் எண் வரலாறு, தமிழ் எண்களின் பெயர் விளக்கம்
ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதமெனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும். இந்த எண்ணலளவை சிற்றிலக்கம், பேரிலக்கமென இருவகைப்படுகிறது.
ஒன்று, இரண்டு, மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கம் எனப்படும்.
தமிழ் எண் | எண்ணுப்பெயர் | எண்ணுப்பெயர் | வேறு பெயர் | அரபி எண் |
---|---|---|---|---|
௦ | சுழியம் | சுண்ணம், பூசியம்[2], சூனியம், பாழ்[3] | 0 | |
௧ | ஒன்று (ஒண்டு) | ஒரு, ஓர் | ஏகம்[4] | 1 |
௨ | இரண்டு | இரு, ஈர் | 2 | |
௩ | மூன்று (மூண்டு) | மு, மூ | 3 | |
௪ | நான்கு | நா, நால் | 4 | |
௫ | ஐந்து | ஐ | 5 | |
௬ | ஆறு | அறு | சே[5] | 6 |
௭ | ஏழு | எழு, ஏழ் | 7 | |
௮ | எட்டு | எண் | 8 | |
௯ | ஒன்பது (தொண்டு, தொண்பது(தொள்+பது), ஒன்பான்) | 9 | ||
௰ | பத்து(பஃது) | தயம்[6][7], தசம்[8] | 10 | |
௱ | நூறு | 100 | ||
௲ | ஆயிரம் | 1000 | ||
ஒன்று
10 ஒன்று=1 பத்து
10 பத்து=1 நூறு
10 நூறு=1 ஆயிரம்
10 ஆயிரம்=1 பத்தாயிரம்(பதினாயிரம்)
10 பத்தாயிரம்=1 நூறாயிரம்(இலக்கம்)
10 நூறாயிரம்=1 பத்துநூறாயிரம்(ஆயிரமாயிரம், பத்திலக்கம்)
10 பத்துநூறாயிரம்=1 கோடி
மடங்கு | பத்து | நூறு | ஆயிரம் | பத்தாயிரம்(பதினாயிரம்) | நூறாயிரம் | பத்துநூறாயிரம் | கோடி |
---|---|---|---|---|---|---|---|
ஒன்று | பத்து(ஒருபத்து) | நூறு(ஒருநூறு) | ஆயிரம்(ஓராயிரம்) | பத்தாயிரம்(பதினாயிரம், ஒருபத்தாயிரம், ஒருபதினாயிரம்) | நூறாயிரம்(ஒருநூறாயிரம்) | பத்துநூறாயிரம்(ஒருபத்துநூறாயிரம்) | கோடி(ஒருகோடி) |
இரண்டு | இருபது | இருநூறு | ஈராயிரம் | இருபதாயிரம்(இருபதினாயிரம்) | இருநூறாயிரம் | இருபதுநூறாயிரம் | இருகோடி |
மூன்று | முப்பது | முந்நூறு(முன்னூறு தவறானது[9][10]) | மூவாயிரம் | முப்பதாயிரம்(முப்பதினாயிரம்) | முந்நூறாயிரம் | முப்பதுநூறாயிரம் | முக்கோடி |
நான்கு | நாற்பது | நானூறு | நாலாயிரம் | நாற்பதாயிரம்(நாற்பதினாயிரம்) | நானூறாயிரம் | நாற்பதுநூறாயிரம் | நாற்கோடி |
ஐந்து | ஐம்பது | ஐந்நூறு(ஐநூறு தவறானது[11]) | ஐயாயிரம் | ஐம்பதாயிரம்(ஐம்பதினாயிரம்) | ஐநூறாயிரம் | ஐம்பதுநூறாயிரம் | ஐங்கோடி |
ஆறு | அறுபது | அறுநூறு | ஆறாயிரம் | அறுபதாயிரம்(அறுபதினாயிரம்) | அறுநூறாயிரம் | அறுபதுநூறாயிரம் | அறுகோடி |
ஏழு | எழுபது | எழுநூறு | ஏழாயிரம் | எழுபதாயிரம்(எழுபதினாயிரம்) | எழுநூறாயிரம் | எழுபதுநூறாயிரம் | எழுகோடி |
எட்டு | எண்பது | எண்ணூறு | எட்டாயிரம் | எண்பதாயிரம்(எண்பதினாயிரம்) | எண்ணூறாயிரம் | எண்பதுநூறாயிரம் | எண்கோடி |
ஒன்பது | தொண்ணூறு(தொள்+நூறு=((10-1)x101)) | தொள்ளாயிரம்(தொள்+ஆயிரம்=((10-1)x102)) | ஒன்பதாயிரம்(ஒன்பதினாயிரம்) | தொண்ணூறாயிரம்(தொள்+நூறாயிரம்=((10-1)x104)) | ஒன்பதுநூறாயிரம் | தொண்ணூறுநூறாயிரம் | ஒன்பதுகோடி |
பத்து(ஒருபத்து) | நூறு(ஒருநூறு) | ஆயிரம்(ஓராயிரம்) | பத்தாயிரம்(பதினாயிரம், ஒருபத்தாயிரம், ஒருபதினாயிரம்) | நூறாயிரம்(ஒருநூறாயிரம்) | பத்துநூறாயிரம்(ஒருபத்துநூறாயிரம்) | கோடி | பத்துகோடி(அற்புதம்) |
முதன்மைக் கட்டுரை: அல்பெயர் எண்
10 கோடி=1 அற்புதம்
10 அற்புதம்=1 நிகற்புதம்
10 நிகற்புதம்=1 கும்பம்
10 கும்பம்=1 கணம்
10 கணம்=1 கற்பம்
10 கற்பம்=1 நிகற்பம்
10 நிகற்பம்=1 பதுமம்
10 பதுமம்=1 சங்கம்
10 சங்கம்=1 சமுத்திரம்
10 சமுத்திரம்=1 ஆம்பல்
10 ஆம்பல்=1 மத்தியம்
10 மத்தியம்=1 பரார்த்தம்
10 பரார்த்தம்=1 பூரியம்
10 பூரியம்=1 முக்கோடி
10 முக்கோடி=1 மகாயுகம்
அரை கால், அரைக்கால் வீசம்(மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கம் எனப்படும்.
சிற்றிலக்கத்தில் கீழ்வாயிலக்கமென்றும், மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு.
கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தோடு ஒப்பு நோக்கியே, அரை, கால், அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும்.
மேல்வாயிலக்கம் மற்றும் கீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்
மேல்வாயிலக்க வாய்ப்பாடு[13][14] | மதிப்பு | மேல்வாயிலக்க மடங்குகள்[14] | கீழ்வாயிலக்க வாய்ப்பாடு | மதிப்பு |
---|---|---|---|---|
முந்திரி[13](மேல்முந்திரி, முந்திரை[15]) | 1/320 | முந்திரி=1/320 அரைக்காணி முந்திரி=அரைக்காணி+முந்திரி=1/160+1/320=3/320 | 1/320 மேல்முந்திரி=கீழ்முந்திரி 1/320 கீழ்முந்திரி=கீழ்க்கீழ் முந்திரி[3][16][17] 1/320 கீழ்க்கீழ் முந்திரி=கீழ்க்கீழ்க்கீழ் முந்திரி[17][18] | 1/102400 |
2 முந்திரி=அரைக்காணி[13] | 1/160 | அரைக்காணி=அரைxகாணி=½x1/80=1/160 காணியரைக்காணி=காணி+அரைக்காணி=1/80+1/160=3/160 அரைமாவரைக்காணி=அரைமா(இரண்டு காணி)+அரைக்காணி=1/40+1/160=1/32 முக்காணியரைக்காணி=முக்காணி+அரைக்காணி=3/80+1/160=7/160 | ||
2 அரைக்காணி=காணி[13] | 1/80 | காணி=1/80 முக்காணி=மூன்றுxகாணி=3x1/80=3/80 மாகாணி=மா(ஒருமா)+காணி=1/20+1/80=1/16=வீசம்(மேல்வீசம்) ஒருமாமுக்காணி=ஒருமா+முக்காணி=1/20+3/80=7/80 இரண்டுமாக்காணி=இரண்டுமா+காணி=1/10+1/80=9/80 இரண்டுமாமுக்காணி=இரண்டுமா+முக்காணி=1/10+3/80=11/80 மூன்றுமாக்காணி=மூன்றுமா+காணி=3/20+1/80=13/80 மும்மா முக்காணி(மூன்றுமா முக்காணி)=மும்மா+முக்காணி=3/20+3/80=3/16=மூன்றுவீசம் நாலுமாக்காணி=நாலுமா+காணி=⅕+1/80=17/80 நாலுமா முக்காணி=நாலுமா+முக்காணி=⅕+3/80=19/80 | ||
4 காணி=மா(ஒருமா)[13] | 1/20 | மா(ஒருமா)=1/20 இருமா(இரண்டுமா)=இரண்டுxமா=2x1/20=1/10 மும்மா(மூணுமா, மூன்றுமா)=மூன்றுxமா=3x1/20=3/20 நாலுமா(நான்குமா, நான்மா)=நான்குxமா=4x1/20=⅕ அரைமா=அரைxமா=½x1/20=1/40 ஒருமாவரை=ஒருமா+அரைமா(இரண்டு காணி)=1/20+1/40=3/40 இரண்டுமாவரை=இரண்டுமா+அரைமா=1/10+1/40=⅛=அரைக்கால் மூன்றுமாவரை=மூன்றுமா+அரைமா=3/20+1/40=7/40 நாலுமாவரை=நாலுமா+அரைமா=⅕+1/40=9/40 | ||
5 காணி=வீசம்(மேல்வீசம், மாகாணி) | 1/16 | கால்வீசம்=கால்xவீசம்=¼x1/16=1/64 அரைவீசம்=அரைxவீசம்=½x1/16=1/32 முக்கால்வீசம்=முக்கால்xவீசம்=¾x1/16=3/64 வீசம்=1/16 மூன்றுவீசம்=மூன்றுxவீசம்=3x1/16=3/16 காலேமாகாணி(காலேவீசம்)=கால்+மாகாணி=¼+1/16=5/16 காலேமூன்றுவீசம்=கால்+மூன்றுவீசம்=¼+3/16=7/16 அரையேவீசம்=அரை+வீசம்=½+1/16=9/16 அரையேமூன்றுவீசம்=அரை+மூன்றுவீசம்=½+3/16=11/16 முக்காலேவீசம்=முக்கால்+வீசம்=¾+1/16=13/16 முக்காலேமூன்றுவீசம்=முக்கால்+மூன்றுவீசம்=¾+3/16=15/16 | 1/320 மேல்வீசம்=கீழ்வீசம் | 1/5120 |
2 வீசம்=அரைக்கால்(மேலரைக்கால்) | ⅛ | அரைக்கால்=அரைxகால்=½x¼=⅛ காலேயரைக்கால்=கால்+அரைக்கால்=¼+⅛=⅜ அரையேயரைக்கால்=அரை(இரண்டு கால்)+அரைக்கால்=½+⅛=⅝ முக்காலேயரைக்கால்=முக்கால்+அரைக்கால்=¾+⅛=⅞ | 1/320 மேலரைக்கால்=கீழரைக்கால் | 1/2560 |
5 மா=கால்(மேற்கால்)[13] | ¼ | கால்=¼ முக்கால்=மூன்றுxகால்=3x¼=¾ | 1/320 மேற்கால்=கீழ்க்கால் | 1/1280 |
2 கால்=அரை(மேலரை) | ½ | 1/320 மேலரை=கீழரை | 1/640 | |
2 அரை=ஒன்று[13] | 1 |
கீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்.
கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்பு | கீழ்வாய் இலக்கத்தின் பெயர் |
---|---|
1/640 | கீழரை |
1/1280 | கீழ்க்கால் |
1/2560 | கீழரைக்கால் |
1/5120 | கீழ் வீசம் |
1/102400 | கீழ் முந்திரி |
1/1075200 | இம்மி |
1/23654400 | மும்மி |
1/165580800 | அணு |
1/1490227200 | குணம் |
1/7451136000 | பந்தம் |
1/44706816000 | பாகம் |
1/312947712000 | விந்தம் |
1/5320111104000 | நாகவிந்தம் |
1/74481555456000 | சிந்தை |
1/489631109120000 | கதிர்முனை |
1/9585244364800000 | குரல்வளைப்படி |
1/575114661888000000 | வெள்ளம் |
1/57511466188800000000 | நுண்மணல் |
1/2323824530227200000000 | தேர்த் துகள் |
மிக நுட்பமான கணித முறைகளைப் பூர்வம் தமிழ் மக்கள் வழங்கி வந்தார்களென்று நாம் அங்கங்கே காண்கிறோம். ஒரு இம்மி கூட விட மாட்டேன் என்ற சொல் நாளது வரையும் வழக்கத்திலிருக்கிறது. நுட்பமாகக் கணக்குப் பார்க்கும் ஒருவனைப் பார்த்து என்ன இம்மிக் கணக்குப் பார்க்கிறோயோ என்று கேட்கும் வழக்கத்தைத் தமிழ் மக்கள் நன்றாய் அறிவார்கள். மூன்று பேருக்கு ஒன்றைப் பங்கு செய் என்று சொன்னால்,
“ | மூவொருகால் முக்கால் மீதி கால் மும்மாகாணி முண்டாணி மீதி மாகாணி (மாகாணியாவது ஒரு மாக்காணி) |
” |
இரண்டு முந்திரியாவது கீழ் இரண்டு.
மூன்று பேருக்கு இரண்டு
“ | மூவரை ஒன்றரை மீதி அரை மூவரைக்கால் காலேயரைக்கால் மீதி யரைக்கால் (அரைக்காலாவது 2லு மா) |
” |
மூன்று பேருக்கு 21 மூவேழு இருபத்தொன்று.
ஆக ஒருவன் பேருக்கு
காலேமாகாணி காணி அரைக்காணி கீழ் அரையேயரைக்கால் முக்காணி முந்திரி இம்மி ஏழு என்று ஓலையிலாவது கடிதத்திலாவது தரையிலாவது எழுதாமல் மனக்கணக்காகவே பார்த்துப் பதில் சொல்லும் வழக்கம் நாளது வரையும் இருந்து வருகிறது(தற்காலத்தில் அருகிவிட்டது). இதுபோல் 3, 5, 7, 11, 13, 17 போன்ற இலக்கங்களும் அவற்றின் பெருக்குத் தொகைகளும் பிரிக்கப் படுவதற்காக இதிலும் நுட்பமான வாய்ப்பாடுகளை வழங்கி வந்தார்கள்.[20]
1 இம்மி | 11 மும்மி |
1 மும்மி | 7 அணு |
1 அணு | 9 குணம் |
1 குணம் | 5 பந்தம் |
1 பந்தம் | 6 பாகம் |
1 பாகம் | 7 விந்தம் |
1 விந்தம் | 17 நாகவிந்தம் |
1 நாகவிந்தம் | 60 குரல்வளைப்படி |
1 குரல்வளைப்படி | 60 வெள்ளம் |
1 வெள்ளம் | 100 நுண்மணல் |
எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்தலளவையில் பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க ஒன்றுமாக இருவகையுண்டு. பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும். குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாமெனப் படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும். இந்த எடுத்தலளவை பொன்னளவை,பிற பொருளளவையென இருவகைப்படுகிறது. அரசு முத்திரை இட்ட அளவுக்கல்லானது, குடிஞைக்கல், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது. அதே அளவுக்கல்லானது, நகரங்களில் நகரக்கல் எனப்பட்டது.
நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது.
32 குன்றிமணி | 1 வராகன்(வராகனெடை) | 1.067 கிராம் |
10 வராகனெடை | 1 பலம் | 10.67 கிராம் |
8 பலம் | 1 சேர் | 85.33 கிராம் |
5 சேர் | 1 வீசை | 426.67 கிராம் |
1000 பலம் | 1 கா | 10.67 கிலோகிராம் |
6 வீசை | 1 துலாம் | 2.560 கிலோகிராம் |
8 வீசை | 1 மணங்கு | 3.413 கிலோகிராம் |
20 மணங்கு | 1 கண்டி (பாரம்) | 68.2667 கிலோகிராம் |
பொன்னையும்,மணியையும் நிறுக்கப் பயன்படுகிறது. இது 'பொன்னிலக்கம்' எனப்பட்டது.
பொன்னிலக்கம் என்பதன் அலகுகள்
1 நெல் (எடை) | 8.33 மில்லிகிராம் | |
4 நெல் | 1 குன்றிமணி | 33.33 மில்லிகிராம் |
2 குன்றிமணி | 1 மஞ்சாடி | 66.67 மில்லிகிராம் |
2 மஞ்சாடி | 1 பணம்(பணவெடை)* | 133.33 மில்லிகிராம் |
8 பணம்(பணவெடை) | 1 வராகன் | 1.067 கிராம் |
5 வராகன் | 1 கழஞ்சு | 5.33 கிராம் |
4 கழஞ்சு | 1 கஃசு | 10.4 கிராம் |
4 கஃசு | 1 பலம் | 41.6 கிராம் |
1.5 கழஞ்சு | 8 கிராம் |
பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை நெல்லிலக்கம் எனப்படும்.
(எடுத்துக்காட்டு:சோழாந்தகன் நாழி, அருண்மொழித்தேவன் மரக்கால்)
நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.
1 படிக்கு
1 தேக்கரண்டி - 4 மி.லி
1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி)
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி
1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி)
1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 பாலாடை - 30 மி.லி
1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 குறுணி (மரக்கால்)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
நீட்டலளவை வழியளவை, நிலவளவையென இருவகைப்படுகிறது.
இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-
எடுத்துக்காட்டு
“ | ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரைக் கீழ் நான்கு மாவினால் இறை கட்டின காணிக்கடன்"(சோ.,பக்.58) |
” |
- இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428,800,000 வேலி.
நொடி, நாழிகை, நாளெனக் காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.
அளவை | அளவை முறை | குறிப்புகள் | ||
---|---|---|---|---|
1 குழி(குற்றுழி) | கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம் | |||
10 குழி | 1 கண்ணிமை | கண்ணை இமைக்கும் நேர அளவு | ||
2 கண்ணிமை | 1 கைந்நொடி[21] | கையை நொடிக்கும் நேர அளவு | ||
2 கைந்நொடி | 1 மாத்திரை[21] | |||
2 மாத்திரை | 1 குரு[21] | |||
2 குரு | 1 உயிர்[21] | |||
6 உயிர் | 1 சணிகம்[21] | தற்கால 2 நொடி அளவு | ||
12 சணிகம் | 1 விநாடி[21] | தற்கால 24 நொடி அளவு | ||
60 தற்பரை | 1 விநாடி | |||
60 விநாடி | 1 நாழிகை(நாடி)[21] | தற்கால 24 நிமிட அளவு | ||
2 சணிகம் | 1 அணு | [சான்று தேவை] | ||
6 கண்ணிமை | 1 நொடி(சிற்றுழி) | ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம் | [சான்று தேவை] | |
2 நொடி | 1 வினாடி | ஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம் | [சான்று தேவை] | |
5 வினாடி | 1 அணு | [சான்று தேவை] | ||
6 அணு | 1 துளி(நாழிகை வினாடி) | [சான்று தேவை] | ||
15 அணு | 1 நிமிடம் | [சான்று தேவை] | ||
60 அணு | 1 கணம் | [சான்று தேவை] | ||
6 கணம் | 1 நாழிகை | [சான்று தேவை] | ||
15 கணம் | 1 ஓரை | [சான்று தேவை] | ||
2½ நாழிகை | 1 ஓரை[22] | 60 நிமிடம் | தற்கால ஒரு மணிநேரம் | |
3¾ நாழிகை | 1 முகூர்த்தம்[22] | 1½ ஓரை | ||
7½ நாழிகை | 1 சாமம்[22] | 3 ஓரை, 2 முகூர்த்தம் | ||
10 நாழிகை | 1 சிறும்பொழுது | 4 ஓரை | ||
4 சாமம் | 1 பொழுது[22] | 30 நாழிகை | ||
2 பொழுது | 1 நாள்(திகதி)[22] | 60 நாழிகை, 6 சிறும்பொழுது | கதிரவன் உதிக்கும் நேரம் நாளின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது | தற்கால 24 மணிநேர அளவு(ஒரு நாள்) |
7 நாள் | 1 கிழமை(வாரம்)[22] | கதிரவன் உதிக்கும் நேரத்தின்(ஒரு நாளின் தொடக்கம்) ஓரை(இராசி) ஞாயிறு ஓரை வரும் நாள்(ஞாயிற்றுக்கிழமை) வாரத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது | தற்கால ஒரு வாரம் | |
15 நாள் | 1 அழுவம்(பக்கம்)[22] | |||
30 நாள் | 1 திங்கள்(மாதம்)[22] | கதிரவன், ஒரு சூரிய மாதத்தின் ஓரைக்குள்(இராசி) நுழையும் நேரம் அம்மாதத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது | தற்கால ஒரு மாதம் | |
48 நாள் | 1 மண்டலம் | |||
2 திங்கள் | 1 பெரும்பொழுது | 60 நாள் | ||
6 திங்கள் | 1 அயனம்[22] | |||
2 அயனம் | 1 ஆண்டு(வருடம்)[22] | 6 பெரும்பொழுது | கதிரவன், சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ ஓரையில்(இராசி)) நுழையும் நாள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாள், சந்திர மாதத்தில் சித்திரை முதல் நாள் ஆகும். | தற்கால ஒரு ஆண்டு(365 நாள், 15 நாழிகை, 31 விநாடி, 15 தற்பரை) |
64(82) ஆண்டு | 1 வட்டம் | |||
4096(84) ஆண்டு | 1 ஊழி | |||
- | உகம்(யுகம்) | |||
17,28,000(8x2,16,000) ஆண்டு | கிரேதாயுகம்[23] | |||
12,96,000(6x2,16,000) ஆண்டு | திரேதாயுகம்[23] | |||
8,64,000(4x2,16,000) ஆண்டு | துவாபரயுகம்[23] | |||
4,32,000(2x2,16,000) ஆண்டு | கலியுகம்[23] | |||
4 உகங்கள்(43,20,000 ஆண்டு) | 1 சதுர்யுகம்(மகாயுகம்)[24] | |||
2000 சதுர்யுகம் | 1 நான்முகன் பேராயுள்[24] | |||
100 நான்முகன் பேராயுள் | 1 ஆதிநான்முகன் யுகம்[24] |
சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.
1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)
8 பல் - 1 செங்காணி (செப்பு) – 7.2 உளுந்து (கிரைன்)
0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்)
64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) – 57.6 உளுந்து (கிரைன்)
1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)
12 பை - 1 அணா
16 அணா - 1 ரூபாய்
1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா
பணம் - வெள்ளிக்காசு
துட்டு - செப்புக்காசு
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.