From Wikipedia, the free encyclopedia
தங்கா பத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tangga Batu; ஆங்கிலம்: Tangga Batu Federal Constituency; சீனம்: 冬牙峇株国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P136) ஆகும்.[5]
தங்கா பத்து (P136) மலேசிய மக்களவைத் தொகுதி மலாக்கா | |
---|---|
Tangga Batu (P136) Federal Constituency in Malacca | |
தங்கா பத்து மக்களவைத் தொகுதி (P136 Tangga Batu) | |
மாவட்டம் | மத்திய மலாக்கா மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 115,998 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | தங்கா பத்து தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுங்கை ஊடாங், பந்தாய் குண்டோர், பாயா ரும்புட், கிளேபாங் |
பரப்பளவு | 121 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | பக்ரி சமாலுதீன் (Bakri Jamaluddin) |
மக்கள் தொகை | 198,033[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
தங்கா பத்து மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து தங்கா பத்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். தங்கா பத்து மக்களவை தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஆங் துவா ஜெயா நகரம் என்பது மத்திய மலாக்கா மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய நகரம். பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7]
ஆங் துவா ஜெயா புறநகர் நிலப்பகுதியின் பங்கு முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் அமைந்துள்ளது.
தங்கா பத்து மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் தங்கா பத்து தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P136 | 2004–2008 | இட்ரிஸ் அருண் (Idris Haron) | பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அபு பக்கர் முகமட் தியா (Abu Bakar Mohamad Diah) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | ருசுனா அலுவாய் (Rusnah Aluai) | பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | பக்ரி சமாலுதீன் (Bakri Jamaluddin) | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
பக்ரி சமாலுதீன் (Bakri Jamaluddin) | பெரிக்காத்தான் நேசனல் | 37,406 | 40.65 | 40.65 | |
ருசுனா அலுவாய் (Rusnah Aluai) | பாக்காத்தான் அரப்பான் | 28,557 | 31.03 | 15.86 ▼ | |
லிம் பான் கோங் (Lim Ban Hong) | பாரிசான் நேசனல் | 25,095 | 27.27 | 12.88 ▼ | |
கசாலி அபு (Ghazali Abu) | தாயக இயக்கம் | 702 | 0.76 | 0.76 | |
சரில் மகமுட் (Shahril Mahmood) | சுயேச்சை | 267 | 0.29 | 0.29 | |
மொத்தம் | 92,027 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 92,027 | 98.94 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 989 | 1.06 | |||
மொத்த வாக்குகள் | 93,016 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,15,998 | 80.19 | 4.48 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.