டெட்பூல் 2
From Wikipedia, the free encyclopedia
டெட்பூல் 2 (Deadpool 2) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டெட்பூல் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து 20ஆம் சென்சுரி பாக்ஸ், மார்வெல் மகிழ்கலை, கென்றே பிலிம்ஸ், மாக்ஸிமும் எபிபோர்ட், தி டொன்னேர்ஸ் கம்பெனி, டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது. இது எக்ஸ்-மென் திரைப்படத் தொடரின் பதினோராவது திரைப்படமும் 2016 ஆம் ஆண்டு வெளியான டெட்பூல் திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும்.
டெட்பூல் 2 | |
---|---|
இயக்கம் | டேவிட் லீச்[1] |
தயாரிப்பு |
|
மூலக்கதை | |
இசை | டைலர் பேட்ஸ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜொனாதன் சேலா |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
வெளியீடு | மே 10, 2018 (2018-05-10) (பேரரசு, லெய்செஸ்டர் சதுக்கம்) மே 18, 2018 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 119 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $110 மில்லியன் |
மொத்த வருவாய் | $785.8 மில்லியன் |
சைமன் கின்பெர்க், ரையன் ரெனால்ட்சு, லாரன் ஷுலர் டோனர் போன்றோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரையன் ரெனால்ட்சு, ஜோஷ் புரோலின், மோரேனா பாக்கரின், ஜூலியன் டெனிசன், ஜாஸி பீட்ஸ், டி. ஜே. மில்லர், பிரையன்னா ஹில்டெபிராண்ட் மற்றும் ஜாக் கெஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
டெட்பூல் 2 திரைப்படம் ஐக்கிய அமெரிக்காவில் மே 18, 2018 அன்று 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[4] இந்த திரைப்படம் உலகளவில் $785 மில்லியனை வசூலித்தது. இது 2018 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மிக அதிக வசூல் செய்த படமாகவும், எக்ஸ்-மென் தொடரில் அதிக வசூல் செய்த படம் ஆகும். அடுத்த ஆண்டு ஜோக்கர் என்ற திரைப்படம் இதை விட அதிக வசூல் செய்த ஆர்-மதிப்பிடப்பட்ட படம் ஆகும். இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, அதன் நகைச்சுவை, நடிகர்கள், கதை மற்றும் அதிரடி காட்சிகளைப் பாராட்டியவர், ஆனால் அதன் தெளிவற்ற திரைக்கதையை விமர்சித்தார்கள்.